- · 5 friends
-
I
துறவியை விபச்சாரியிடம் அனுப்பிய புத்தர்
கௌதமரும் அவருடைய சீடர்களும் தொடர்ந்து ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கும், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கும் இடையறாமல் சென்றுகொண்டிருந்தனர்.
அவர் எங்கு சென்றாலும், அவருடன் குறைந்தது 2000 முதல் 3000 துறவிகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் தங்கள் உணவுக்காக பிச்சை எடுத்து உண்பவர்களாக இருந்தனர்.
இந்தியக் கலாச்சாரத்தில், ஆன்மீகப் பாதையில் இருக்கும் ஒருவர் உங்கள் வீட்டுக்கு வந்து உணவுகேட்டால், உங்கள் சொந்த குழந்தைகள் சாப்பிடாமல் இருந்தாலும், முதலில் அவருக்கு உணவை வழங்கவேண்டும்.
மக்கள் இப்படி இருந்தபோது, ஒவ்வொரு முறையும் அவர் 2000-3000 துறவிகளுடன் ஒரு நகரத்துக்குள் திடீரென்று நுழையும் போது, கிராமவாசிகளுக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்படும்.
எனவே, கௌதமர், மக்களுக்கு சுமை ஏற்படாதபடி, அவர்கள் மூன்று நாட்களுக்குமேல் எந்த இடத்திலும் தங்கக்கூடாது என்று ஒரு விதி செய்தார்.
மழைக்காலங்களில் மட்டும், காடுகளின் வழியாக கால்நடையாகப் பயணம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பலத்த மழை பெய்வது வழக்கம்.
காடுகளின் வழியாக நடந்து செல்வது ஆபத்தானதாக இருந்திருப்பதுடன், பலரும் உயிர் இழந்திருக்கவும் கூடும். எனவே, அவர்கள் ஒரு பெரிய நகரத்தில் முகாமிட்டபோது, பல வீடுகளில் பரவலாக தங்கியிருந்த ஒரு காலமாக இது இருந்தது.
பகலில், துறவிகள் யாசிப்பதற்காக வெளியில் சென்றனர்.
ஆனந்ததீர்த்தர் ஒரு விபச்சாரியை சந்தித்தார். அவள் அவருக்கு யாசகம் அளித்தாள். அவர் உயரமும், அழகுமான இளைஞனாக இருப்பதைக் கண்டதும், அவரிடம், “துறவிகள் தங்குமிடம் தேடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் ஏன் என் வீட்டில் வந்து தங்கக்கூடாது?” என்று கேட்டாள்.
ஆனந்ததீர்த்தர், “நான் எங்கு தங்கவேண்டும் என்று புத்தரிடம் கேட்க வேண்டும்” என்றார். அவள் கேலி செய்தாள், “ஓ, உங்கள் குருவிடம் கேட்க விரும்புகிறீர்களா? போய் அவரிடம் கேளுங்கள். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.”
ஆனந்தர், கௌதமரிடம் சென்று தான் சேகரித்ததை அவர் காலடியில் வைத்தார். ஒவ்வொருவரும் எங்கு சென்றாலும் உணவு மற்றும் தங்குமிடத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
எனவே ஆனந்தர், “இந்தப் பெண் என்னை அழைக்கிறாள். நான் அங்கே தங்கமுடியுமா?” என்று கேட்டார். கௌதமர், “அவள் உன்னை அழைக்கிறாள் என்றால், நீ சென்று அங்கே தங்கவேண்டும்,” என்றார். அதைக் கேள்விப்பட்டதும், சுற்றிலும் இருந்த நகரமக்கள் கோபமடைந்தனர்.
அவர்கள், “என்ன? ஒரு துறவியானவர், விபச்சாரியின் வீட்டில் தங்கப் போகிறாரா? இதுதான்! இந்த ஆன்மீக செயல்முறை ஊழல் நிறைந்ததாகி விட்டது” என்று பேசினர்.
கௌதமர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள்? அந்த பெண்மணி அவரை அழைக்கிறார். அவர் அங்கேயே இருக்கட்டும். இதில் என்ன பிரச்சனை?” என்றார்.
மக்கள் அவரிடமிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தனர். கௌதமர், “பொறுங்கள், நான் இந்த பாதையில் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், வாழ்க்கையை வாழ இது மிகவும் மதிப்பு வாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த வழி என்பதை நான் காண்கிறேன்.
ஆனால் இப்போது நீங்கள் என்னிடம், அவளுடைய வழிகள் என்னுடையதைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறீர்களே?
அது உண்மை என்றால், நான் சென்று அவளுடன் இணையவேண்டும். உண்மையாகவே தேடுதலில் இருப்பவர் என்ற வகையில், அது அப்படித்தான் இருக்கவேண்டும் – மிக உயர்ந்த ஒன்றை நீங்கள் கண்டால், அதை நீங்கள் நாடிச் செல்லவேண்டும்” என்றார்.
மக்கள் கடுங்கோபத்தில் இருந்தனர், அங்கிருந்து பலர் வெளியேறி விட்டனர். ஆனந்தர் அவளுடன் சென்று தங்கினார். மழையின் காரணத்தால், குளிர் அதிகமானது. அவர் ஒரு மெல்லிய அங்கியை மட்டுமே அணிந்திருந்தார், எனவே அவள் அவருக்கு ஒரு நல்ல பட்டுமேலாடை கொடுத்தாள். அவர் அதைத் தன் உடல் மீது போர்த்திக் கொண்டார். மக்கள் இதைப் பார்த்தபோது, அவர் வழி தவறிச் சென்றதற்கான ஆதாரமாக அதை எடுத்துக்கொண்டனர்.
அவள் அவருக்கு நல்ல உணவைச் சமைத்துத் தந்தாள். அதனை அவர் உண்டார். மாலையில், அவள் அவருக்காக நடனமாடினாள். அதைக் கூர்மையான கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
மக்கள் இசையைக் கேட்டதும், அவர் அவளிடம் மயங்கிவிட்டதாக நினைத்தார்கள். நேரம் சென்றது. மழை நின்று, செல்ல வேண்டிய நேரம் வந்தபோது, ஆனந்தர் ஒரு பெண் துறவியுடன் கௌதமரிடம் வந்தார். இதுதான் உண்மையின் பாதையில் இருப்பதன் ஆற்றல்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·