Support Ads
Main Menu
 ·   · 101 posts
  •  · 12 friends
  •  · 12 followers

அட்சய திதி அன்று வீட்டில் ஏற்ற வேண்டிய தீபமும் செய்ய வேண்டிய தனமும்

வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க நாளை வரகூடிய அட்சய திதி அன்று வீட்டில் குபேரரரையும், லட்சுமியையும் நினைத்து மஞ்சள் தீபம் ஏற்றவேண்டும். அந்த மஞ்சள் தீபத்தை எந்த நேரத்தில், எப்படி ஏற்றுவது என்பதை பற்றியும், நாம் செய்யவேண்டிய முக்கியமான தானத்தை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த தினத்தில் நாம் செய்யும் எந்த ஒரு புண்ணிய காரியத்திற்க்கும், பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரம்ம முகூர்த்த வேலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, முதலில் பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைக்கவேண்டும்.  பிரம்ம முகூர்த்தத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிபாட்டிற்கும் உடனடி பலன் கிடைக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நாளை அட்சய திதி அன்று பிரம்ம முகூர்த்த வேளையிலோ, முடிந்தவரை சூரியன் உதயமாவதற்கு முன்பாக  வீட்டு நிலை வாசல் படிக்கு வெளிப்பக்கத்தில் இந்த குபேர மஞ்சள் தீபத்தை ஏற்ற வேண்டும்.

சுத்தமான சிறிய அளவில் இருக்கும் தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு, அந்தத் தட்டில் சிறிது மஞ்சள்தூளை கொட்டி, அதன் மேல் உங்கள் வீட்டில் என்ன தீபம் இருக்கிறதோ (மண் அகல் தீபமாக இருந்தாலும் நல்லது.) அதை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. உங்கள் வீட்டில் குபேரர் விலக்கு இருந்தால், அந்த விளக்கில் நாளை தீபமேற்றுவது இன்னும் சிறப்புமிக்க ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அட்சயதிதி அன்று காலை ஏற்றப்படும் தீபத்தின் மூலம் நம் வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இன்றும் வட மாநிலத்தவர்கள் இந்த முறையை, வருடம் தவறாமல் பின்பற்றி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீபத்திற்கு அடியில் வைத்திருக்கும் மஞ்சளை, எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வைத்து பூஜித்த பின்பு, அடுத்த நாள் காலை அந்த மஞ்சள் பிள்ளையாரை, தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுவது நல்லது.

இதேபோல் அட்சயதிதி அன்று தயிர் சாதம் செய்து உங்களால் முடிந்த வரை ஏழைகளுக்கு தானம் செய்தால் அதன் புண்ணியம் பல மடங்காகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த வருடம் வரும் அட்சய திரிதியை, சுலபமான முறையில், தங்கம் வாங்க முடியாவிட்டாலும், அதைவிட பல மடங்கு பலன் தரும் புண்ணிய காரியங்களை செய்வதன் மூலம் நம்மால் முழுமையான பலனை பெற முடியும் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு, அனைவரும் சிறப்பாக, குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

0 0 0 0 0 0
  • 252
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
கொய்யாபழம்  சாப்பிடுங்க
கொய்யாபழம்  சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ
வாழைப்பூ விலை எவ்வளவுங்க?
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்."ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி."சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?"
காளிதாசர்
 ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!  சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில்
கபசுர குடிநீரின் நன்மைகள், அதை பயன்படுத்த வேண்டிய முறைகள்
கொரோனாவை தொடர்ந்து உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பானமான கபசுரக்குடிநீரின் மீது எல்லோர் பார்வையும் திரும்பியிருக்கிறது.தற்போது க
Ads
Latest Posts
படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டு
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
மன்மதன்சிலை..! எங்குள்ளது தெரியுமா?
இந்த மன்மதன் சிலையில் 6 அடியில் வில் உள்ளது. அந்த வில்லின் மேல் பகுதியில் உள்ள சிறு துளையின் வழியாக கடுகை போட்டால், அந்த கடுகு வில்லில் புகுந்து கீழே
சாஸ்திரம் ...... தெரிந்துக் கொள்வோமா?
1.இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒ
இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்
ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா?  அக்கோயில் மதுரை மாவட்டம்
ஆயிரத்து எட்டு லிங்கங்கள் பெயர்கள் இதோ.....
1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி லிங்கம் 10 அங்கி ல
Ads