- · 5 friends
-
I
காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கம் பற்றி பிரமிக்க வைக்கும் தகவல்கள்
காட்டில் எந்தனை வலிமை மிக்க விலங்குகள் இருந்தாலும் தொன்று தொட்டு சிங்கம் தான் காட்டின் ராஜாவாக இருக்கின்றது. சிங்கத்தை விடஉடல் அளவில் பெரியது தான் யானை, சிங்கத்தை காட்டிலும் அதிக வேட்டை திறன் கொண்டது தான் புலி, சிங்கத்தை விடவும் வேகமாக ஓடக்கூடியது தான் சிறுத்தை சிங்கத்தை விடவும் புத்திசாலித்தனம் கொண்ட விலங்கு தான் கொரில்லா.
சிங்கங்கள் வேட்டையாடும் முறையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன, ஒப்பிடமுடியாத வலிமை மற்றும் அதிகாரத்துடன் தங்கள் பிரதேசங்களை ஆளுகின்றன. காடுகளில், அதன் சக்திவாய்ந்த உடலமைப்பு மற்றும் மூலோபாய வேட்டையாடும் திறன் உறுதி செய்கின்றன. விலங்கு இராச்சியத்தில் தலைமை மற்றும் அதிகாரத்தின் சாரத்தை சிங்கங்கள் கொண்டுள்ளமையே காரணம்.
ஆண் சிங்கத்தின் தோற்றமானது தனித்துவமானதாக இருக்கிறது. அதன் தாடை பகுதி வேறு எந்த விலங்குக்கும் இல்லாத வகையில் ஒரு அரசனின் கீரிடத்தை ஒத்ததாக காணப்படுகின்றது. சிங்கங்கள் இயற்கையிலேயே அரச தோற்றத்தை கொண்டிருக்கின்றன.
இந்த ஆழமான வேரூன்றிய மரியாதை எண்ணற்ற தொன்மங்கள் மற்றும் புனைவுகளில் தெளிவாகத் தெரிகிறது, அங்கு சிங்கங்கள் பெரும்பாலும் உன்னதமான, தைரியமான விலங்காக சித்தரிக்கப்படுகின்றன.
இது பண்டைய புராணங்களில் பாதுகாவலராக இருந்தாலும் சரி அல்லது அரச அதிகாரத்தின் சின்னமாக இருந்தாலும் சரி, சிங்கத்தின் இருப்பு காட்டில் விலங்கின் ராஜாவாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றன.
பசி ஏற்படும் போதும் எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் போதும் மட்டுமே இவை வேட்டையாடும். இதுவும் சிங்கங்களின் உன்னதமான பண்புகளில் ஒன்று. இவை தன் வலிமை வெளிக்காட்ட மற்ற விலங்குகளை ஒருபோதும் துன்புறுத்துவது கிடையாது. மேலும் அவை பதுங்கி இருந்து வேட்டையாடும் குணத்தை கொண்டவை அல்ல. பகிரங்கமாக பயமின்றி நேருக்கு நேர் தாக்கும் குணத்தை கொண்டிருக்கின்றது.
புலிகள் சிங்கத்தை காட்டிலும் வேட்டை திறன் கொண்டவையாக இருப்பினும் இவை வேட்டையாடுவதற்கு திருட்டுத்தனத்தை கையாளுகின்றது. பதுங்கி இருந்து தாக்கும் ஆனால் சிங்கங்கள் ஒருபோதும் திருட்டுத்தனதால் வேட்டையாடுவது கிடையாது.
சிங்கங்கள் பெரிய விலங்குகளான யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் அல்லது நீர்யானைகளை உள்ளடக்கிய தங்களை விட மிகப் பெரிய விலங்குகளை கூட வீழ்த்தும் ஆற்றல் சிங்கங்களுக்கு இருக்கின்றது. மேலும் இவை வேட்டையாடிய மிச்சத்தை சேமித்து வைத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருப்பதில்லை.
அவற்றின் தனித்துவமான கர்ஜனை காடுகளில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் பயமுறுத்தும் ஒலிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. சிங்கத்தின் கர்ஜனை 114 டெசிபிள்களுக்குச் சமம், இது நீங்கள் புல் வெட்டும் இயந்திரத்தை விட 25 மடங்கு அதிகமாக இருக்குமாம். அமைதியான இரவில், சிங்கத்தின் கர்ஜனை 7 முதல் 8 கிலோமீட்டர் வரையில் கேட்கும்.
சிங்கங்கள் ஒரு போதும் போர் செய்வதற்கு பயப்படுவதே கிடையாது. எந்த நேரத்திலும் போர் செய்யும் குணத்துடன் தயாராக இருக்கும். பயம் என்பதே அறியாத ஒரு விலங்காக இருக்கின்றது. இது போன்ற முக்கிய காரணங்களால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜா என்ற பட்டத்துக்கு ஏற்ப ராஜாவாகவே இருக்கின்றது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·