-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஆகஸ்ட் மாதம் 30, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 14 ஆம் தேதி
மேஷம் -ராசி:
தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். சந்தோஷம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
ரிஷபம் ராசி:
சொத்துப் பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். கழுத்து தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம் -ராசி:
குடும்ப உறுப்பினர்களிடத்தில் கனிவு வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். இழுபறியான தன வரவுகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். நேர்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம் -ராசி:
உழைப்புக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். ஓய்வு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம் -ராசி:
வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். தேவைகளை நிறைவேற்றும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி -ராசி:
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அயலூர் பயணங்களால் மேன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம் -ராசி:
காப்பீடு துறைகளில் ஆதாயம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் மேன்மை உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார நிமித்தமான பயணங்கள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். தனவிருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
விருச்சிகம்- ராசி:
குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சில் நிதானமும், கவனமும் வேண்டும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை
தனுசு -ராசி:
உறவினர்களுக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பாடங்களில் ஆர்வமின்மை ஏற்படும். பயணங்களில் விவேகம் வேண்டும். கடன் செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். அரசு காரியங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மகரம் -ராசி:
கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் பிறக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை பணிகளில் லாபம் மேம்படும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கும்பம் –ராசி:
எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம் -ராசி:
வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் இருக்கவும். சிறுதொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆதரவான சூழல் ஏற்படும். புதிய இலக்குகளை பற்றிய மாறுபட்ட அணுகுமுறை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·