- · 5 friends
-
I
சிறுநீரின் நிறத்தினை வைத்தே சில நோய்களை கண்டுபிடிக்கலாம்
மனித உடம்பில் பல நோய்கள் ஆட்கொள்ளும் நிலையில், இவற்றினை சில அறிகுறிகள் மூலம் நமது உடல் வெளிக்காட்டுகின்றது. சிறுநீரின் நிறத்தினை வைத்தே சில நோய்களை கண்டுபிடித்துவிடலாம்
ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அவரது சிறுநீரை எடுத்து பரிசோதனை செய்வதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன நோய் இருக்கின்றது என்பதை கண்டறிந்துவிடலாம்.
நாம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில் சிறுநீரின் நிறங்களும் மாறுபடுகின்றது. அதாவது ஒரு நபரின் சிறுநீர் வெளிர் மஞ்சளாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்று அர்த்தம்.
சிறுநீரின் நிறம் எவ்வளவு அடர் நிறமாக இருக்குமோ உடம்பில் நோயின் தாக்குதல் தீவிரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது எந்த நிறத்தில் சிறுநீர் இருந்தால் எந்த நோயின் அறிகுறி என்பதை தெரிந்து கொள்வோம்.
ஒருவரது சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாக இருந்தால், நீரிழப்புக்கான அறிகுறியாக இருப்பதுடன், கல்லீரல் தொடர்பான பிரச்சனையாகவும் இருக்கும். சில தருணங்கள் நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளாகவும் இருக்கலாம்.
சிறுநீரின் நிறமானது சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் அது உங்களுக்கு எச்சரிக்கையின் அறிகுறியாகும். சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதையில் தொற்றின் அறிகுறியாகும். சிறுநீர் கழிக்கும் போது வலி இருந்தால் புற்றுநோயாகவும் கூட இருக்கலாம்.
சிறுநீரின் நிறம் வெண்மையாக இருந்தால், உடம்பில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாக அர்த்தம். அதிக தண்ணீர் குடிப்பதும் உடம்பிற்கு தீங்கு ஆகும். ஏனெனில் சிறுநீரகத்தில் அழுத்தம் ஏற்பட்டு, சீறுநீரகம் வேலை செய்வதை நிறுத்திவிடுமாம்.
சரியான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிறுநீரின் நிறம் ஆரஞ்சு நிறமாக இருந்தால், வைட்டமின் சி மற்றும் கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது என்று அர்த்தம். கல்லீரல் நோயினாலும் பாதிக்கப்படலாம். உடனே மருத்துவரை அணுகவும்.
மருத்துவரின் தகுந்த ஆலோசனைக்கு பிறகு எதையும் தீர்மானமாக முடிவு செய்யவும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·