-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஆகஸ்ட் மாதம் 15, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆடி மாதம் 30 ஆம் தேதி
மேஷம் -ராசி:
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மொழி தேர்வுகளில் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் உண்டாகும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம் ராசி:
பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அலைச்சல் மேம்படும். உத்தியோகப் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். வர்த்தகத் துறைகளில் பொறுமை காக்கவும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். யூக விளையாட்டுகளை தவிர்க்கவும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
மிதுனம் -ராசி:
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முயல்வீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்
கடகம் -ராசி:
கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பலதரப்பட்ட விஷயங்களால் மனதில் அமைதியின்மை உண்டாகும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம் -ராசி:
வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுப காரிய பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். பொறுமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி -ராசி:
வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தனிப்பட்ட செயல்பாடுகளில் கவனம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம் -ராசி:
தொழிலில் புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிவீர்கள். சுப காரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
விருச்சிகம்- ராசி:
செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு -ராசி:
மனதில் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஜவுளி பணிகளில் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். வியாபார பணிகளில் சிறு மாறுதல்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். புதுவிதமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம் -ராசி:
வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
கும்பம் –ராசி:
சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுப காரியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
மீனம் -ராசி:
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பயணம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நற்செய்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·