-
- 2 friends
பதினாறு செல்வங்களைப் பெற்று பெருவாழ்வுடன் வாழ வரலட்சுமி வழிபாடு
வரலட்சுமி விரதம் என்பது மகாலட்சுமி தாயாருக்கு செய்யக்கூடிய ஒரு பூஜை முறை ஆகும். அன்றைய தினம் பெண்கள் தங்களுடைய கணவனும், குடும்பமும் நன்றாக இருக்க விரதம் இருந்து அன்று மாலை கலசம் வைத்து மகாலட்சுமி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள்.
அன்றைய தினம் பலரும் தங்களுடைய திருமாங்கல்ய கயிற்றை மாற்றும் பழக்கமும் வைத்திருப்பார்கள். அன்றைய தினத்தில் அனைத்து விதமான செல்வங்களை பெற்று நலமுடன் வாழ்வதற்கு எந்த பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
பதினாறு செல்வங்களைப் பெற்று பெருவாழ்வுடன் வாழ வரலட்சுமி வழிபாடு பொதுவாக வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் தங்களுடைய வீட்டில் கலசத்தை வைத்து அதை மகாலட்சுமியாக பாவித்து வழிபாடு செய்வார்கள். அவ்வாறு கலசத்தை வைக்கும் பொழுது கலச செம்புக்குள் சில முக்கியமான பொருட்களை போடுவார்கள்.
கலசம் வைத்து வழிபடாதவர்களோ அல்லது வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கம் இல்லாதவர்களோ சாதாரணமாக மகாலட்சுமி தாயாரின் படத்தை வைத்து இந்த மூன்று பொருட்களை வைத்து வழிபட்டாலே மகாலட்சுமி தாயாரின் அருளால் அனைத்து விதமான செல்வங்களையும் பெறமுடியும் என்று கூறப்படுகிறது. –
இந்த வருடம் வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி. அன்று ஏகாதேசி திதியும் வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் மூல நட்சத்திரம் வருகிறது. மூல நட்சத்திரம் என்பது சரஸ்வதி தேவிக்குரிய நட்சத்திரமாக திகழ்கிறது.
ஆடி வெள்ளி என்பது அம்மனுக்கு அன்றைய தினம் வரலட்சுமி விரதம் என்பதால் லட்சுமிக்கு மூல நட்சத்திரம் என்பதால் சரஸ்வதிக்கு என்று முப்பெரும் தேவிகளை வழிபடுவதற்கு உகந்த தினமாக அன்றைய தினம் திகழ்கிறது. அன்றைய தினத்தில் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
மாலை 6:00 மணிக்கு கலசம் வைத்து வழிபடுபவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் வழக்கப்படி கலசத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி கலசம் வைத்து வழிபடும் பழக்கம் இல்லாதவர்கள் அல்லது புதிதாக வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் படத்தை எடுத்து ஒரு மனைப் பலகையின் மேல் வைக்க வேண்டும்.
மகாலட்சுமி படத்தின் முன்பாக ஒரு வாழை இலையை விரித்து தங்களால் இயன்ற பிரசாதங்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். மேலும் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் என்று வைப்பது, அதனுடன் ஜாதிக்காய், மாசிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றையும் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து வழிபட வேண்டும். குறைந்தது ஒன்றாவது வைத்து வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு.
இந்த ஜாதிக்காயும் மாசிக்காயும் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இது மிகப்பெரிய வசிய பொருளாகவும் அதேசமயம் மருத்துவ குணம் மிகுந்ததாகவும் திகழ்கிறது. மேலும் நெல்லிக்காய் என்பது மகாலஷ்மிக்கு உரிய தேவ கனியாக கருதப்படுகிறது. இது மூன்றையும் நாம் வீட்டில் வைத்து மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்யும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்கும், குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் நீங்கும், அதோடு 16 செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழ முடியும்.
மனக்குழப்பம் நீங்க எளிமையான பரிகாரம் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களையும் வரலட்சுமி பூஜை செய்யும் பொழுது வாங்கி வைத்து பூஜை செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·