-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஆகஸ்ட் மாதம் 10, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆடி மாதம் 25 ஆம் தேதி
மேஷம் -ராசி:
வாழ்க்கை துணைவருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாகன பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மனதளவில் புதுவிதமான தேடல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம் ராசி:
பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். இழுபறியாக இருந்துவந்த பாக்கிகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் இருந்துவந்த தாமதம் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம் -ராசி:
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் திருப்தி ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் உறவுகள் மேம்படும். புதுவிதமான கலைகளில் ஆர்வம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம் -ராசி:
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களுடன் அறிமுகம் ஏற்படும். எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் கருத்துகளை தவிர்ப்பது நல்லது. தொழில்நுட்ப பயிற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகம் தொடர்பான துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம் -ராசி:
உடன்பிறந்தவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வாகன பயணங்களில் விதிகளுக்கு உட்பட்டு செயல்படவும். திட்டமிட்ட பணிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
கன்னி -ராசி:
மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில புதுமை வெளிப்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆர்வம் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம் -ராசி:
எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பயம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்- ராசி:
இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் மனக்குழப்பம் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் உடல் சோர்வை ஏற்படுத்தும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் பிறக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தொழில்நுட்ப கருவிகளில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் நிதானம் வேண்டும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
தனுசு -ராசி:
சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் ஈடேறும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் கைகூடும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம் -ராசி:
இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிலருக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்கான சூழல் அமையும். எண்ணங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் புதுவிதமான சூழ்நிலை ஏற்படும். கோபம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
கும்பம் –ராசி:
வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வழக்கு பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இசை துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழல் அமையும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம் -ராசி:
உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·