- · 5 friends
-
I
பாட்டியும் நகை பானையும்
ஒரு தடவை மூணு வழிப்போக்கர்கள் போற வழியில, ஒரு பாட்டி வீட்டுக்கிட்ட தங்குனாங்களாம். தங்கள்கிட்ட இருந்த நகைகளை எல்லாம் ஒரு பானைக்குள்ள போட்டு அந்தப் பாட்டிக்கிட்ட கொடுத்து பத்ரமா வச்சுக்கோ. நாங்க திரும்பி வரும்போது வாங்கிக்கிறோம். ஆனா, மூணு பேரும் சேர்ந்து வந்தாதான் கொடுக்கனும்னு சொல்லிக் கொடுத்துட்டு போனாங்களாம்.
கொஞ்சம் தள்ளிருந்த மரத்தடியில உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்களாம். அப்ப ஒருத்தனை மட்டும் அனுப்பி ஒரு பானையில தண்ணி வாங்கிட்டு வரச் சொன்னாங்களாம்.
இவன் சரியான களவானிப்பயலாம். பாட்டிகிட்ட வந்து, பாட்டி பாட்டி, அவங்க அந்த பானைய வாங்கிட்டு வரச் சொல்லிட்டாங்க, அந்த பானையைக் கொடுங்கன்னு கேக்க,
பாட்டியும், அது எப்டீப்பா... மூணு பேரும் சேர்ந்து வந்தாதானே தர்றதா பேச்சுன்னு கேக்க, இந்த ஜெகஜ்ஜாலக் கில்லாடியும், பாட்டி அந்தா அவங்கள்லாம் அங்கனதான் உக்காந்துருக்காங்க, நான் இப்ப அவங்கள சொல்லச் சொல்றேன்னுட்டு,
அவங்களைப் பாத்து சத்தமா பானையோடதானே வாங்கிட்டு வரச் சொன்னீங்கன்னு கேக்க, அவங்களும் தண்ணின்னு நெனச்சு ஆமா பாட்டி கொடுத்து விடுன்னு சொல்ல,
இவன் பானையோட நகையெல்லாம் லவட்டிக்கிட்டு போயிட்டான். என்னடா, போனவனை இன்னும் காணோமேன்னு ரெண்டு பேரும் வந்து கேக்க, பாட்டியும், நீங்க ரெண்டு பேரும் சொன்னதால பானையக் கொடுத்து விட்டேனே, உங்ககிட்ட வரலையான்னு கேக்க,
அவ்ளோதான்... கன்னாபின்னானு கத்த ஆரம்பிச்சுட்டாங்க. உன்னைய தண்ணிப்பானைதானே கொடுக்கச் சொன்னோம். இப்டீ நகைப்பானையைக் கொடுத்து விட்டாயேன்னு கூப்பாடு போட்டு, உன் வீட்டை எழுதிக்குடுன்னு ஒரே பிரச்சனை பண்ணிட்டாங்க.
அப்பாவிப்பாட்டிக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. ஒரே கவலையாப் போச்சு. நல்லது பண்ணப்போக இப்டீயாகிப் போச்சேன்னு, இடிஞ்சு போயி உக்கார்ந்துருச்சாம். ஊர்க்காரங்கள்லாம் பார்த்துட்டு, இதை மரியாதைராமன் கிட்ட வழக்கா கொண்டு வந்துட்டாங்களாம்.
பூராக் கதையும் கேட்ட மரியாதைராமனுக்கு எல்லாம் புரியவந்துச்சாம். பாட்டியைப் பாக்கவும் பாவமா இருந்துச்சாம். இப்ப அந்த ரெண்டு பேரையும் கூப்பிட்டு, இந்தாங்கப்பா சம்சாரிகளே, உங்க பானை எங்கேயும் போயிருக்காது. மூணுபேரும் வந்து கேட்டாத்தானே பானையத் தர்றதா பேச்சு? இப்ப ரெண்டு பேரு மட்டும் வந்து கேட்டா எப்டீ? போங்க, போயி மூணாவது ஆளையும் கண்டு பிடிச்சுக் கூட்டிட்டு வாங்க, பானைய வாங்கிக்கலாம்னு தீர்ப்பு சொல்லிட்டாராம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·