- · 5 friends
-
I
சிந்தித்துப் பேசுங்கள்
பெரிய ஆலமரம் போல மாறி விட்டதாக, அரசன் ஒருவன் கனவு கண்டான்.
கனவால் என்ன விளைவுகள் நேருமோ? என்று பயந்து அரண்மனை ஜோதிடரை அழைக்க.
"அரசே! நீங்கள் கண்டது தீய கனவு. உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள் எல்லாம். உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்" ஓலைச்சுவடி பார்த்து கூற,
அரசன் மிகவும் கோபமுற்று, "இந்த ஜோதிடரைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!" என்று உத்தரவிட்டான்.. வேறு ஒரு ஜோதிடரை வரவழைத்து, வினவ "அரசரே . நீங்கள் கண்டது நல்ல கனவே. நீங்கள், உற்றார் உறவினர்களை எல்லாம் விட நீண்ட காலம் வாழ்வீர்கள்". என்றார்.
அரசர், மனம் குளிர்ந்து தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.
இரு ஜோதிடர்களும் அதே ஓலையைத் தான் படித்தார்கள். அதே பலனைத்தான் சொன்னார்கள்.
"அரண்மனை ஜோதிடர் அரசரின் சொந்தங்கள் எல்லாம், மன்னருக்கு முன் இறந்து விடுவார்கள்" என்றார்.
இன்னொரு ஜோதிடரோ, "அரசர், உற்றார் உறவினர்கள் எல்லோரையும் விட நீண்ட ஆயுளோடு வாழ்வார்' என்றார்..
பேசும் வார்த்தைகள், மற்றவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமே தவிர, வருத்தம் அடையச் செய்யக்கூடாது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·