- · 5 friends
-
I
மூலிகைகளின் அரசன் என்றும் திருநீற்றுப் பச்சிலை
நீங்கள் ஜிகர்தண்டா குடித்திருக்கிறீர்களா…? ஆம் எனில், அதில் உடல் குளிர்ச்சிக்காகப் போடப்படும் சப்ஜா விதைகளை பார்த்திருப்பீர்கள்.அந்த சப்ஜா விதைகள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையவை.
சப்ஜா விதைகளை உற்பத்தி செய்யக்கூடிய திருநீற்றுப்பச்சிலை, மிகவும் வாசனை மிகுந்தது.துளசி இனத்தைச் சேர்ந்த இது, தெய்வீக மூலிகையாக விளங்குகிறது.
வெண்மை நிறத்தில் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்யும் இந்தச் செடி இருக்கும் இடங்களை நாடி தேனீக்கள் பறந்து வரும்.
பயன்கள்:
இந்த இலையை கசக்கி முகர்ந்தால் தலைவலி, நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும்.
வாந்தியை நிறுத்துவதில் மிகச் சிறந்த மருந்து.
ரத்த வாந்தியைக் கூட கட்டுப்படுத்தக் கூடியது.
சத்துக்கள்:
திருநீற்றுப்பச்சிலையில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளன.
இதில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன.
பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புக்கள் உள்ளன.
மேலும், சிட்ரால், சிட்ரோனெலால், ஜெரானியால் போன்ற ஏராளமான மூலப்பொருட்களும் உள்ளன.
மூலிகைகளின் அரசன் என்றும் திருநீற்றுப் பச்சிலை அழைக்கப்படுகிறது.
இதன் இலை கற்பூரத்தின் தன்மை கொண்டது.
வியர்வையை பெருக்கச் செய்யும்.
மருத்துவ குணங்கள்:
பருவ வயதில் முகத்தில் தோன்றும் பருக்கள் , மற்றும் கரும்புள்ளிகள் , போன்ற பிரச்சினைகளுக்கு இந்த இலையைக் கசக்கி முகத்தில் தடவினால், பருக்கள் காணாமல் போகும்.
திருநீற்றுப்பச்சிலையின் விதையை கஷாயம் வைத்து குடித்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல், உடல் உஷ்ணம் போன்றவற்றிற்கு இந்த இலை மிகச் சிறந்த மருந்தாகும்.
இலைச் சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி, இருமல், வாயுப் பிரச்சினைகள் சரியாகும்.
காது வலி, காதில் சீழ் வடிதல் ஆகியவற்றுக்கும் இந்த இலைச் சாறு கண் கண்ட மருந்து.
திருநீற்றுப்பச்சிலையின் இலைகள், பூக்கள், விதைகள் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து ஆரோக்கிய மூலிகை குளியல் எடுக்கலாம். இதனால் படை, தேமல் போன்ற தோல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
தலையில் பேன் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இந்த இலையின் சாற்றை தனியாகவே அல்லது எண்ணெய் கலந்தோ தேய்த்துக் குளித்தால் பேன், பொடுகுத் தொல்லைகள் போய்விடும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·