- · 5 friends
-
I
நான் இன்னும் வேலையில் தான் இருக்கேன் (குட்டிக்கதை)
அரசு அதிகாரி ஒண்டிக்கட்டை, கூடவே ரொம்ப வருடமாக ஒரு வயதான சமயல்காரரை வீட்டோடு வைத்து இருந்தார்.
தினம் வடை பாயசத்தோடு சாப்பாடு எப்பவும் தட புடலாக இருக்கும். அன்று ரிடயர்டு ஆகி விட்டார்.
வீடு வந்ததும் சமயல்காரரிடம், இங்க பாருப்பா நான் ரிடயர்டு ஆகிட்டேன் முழு சம்பளம் கிடையாது வெறும் பென்ஷன் தான் அதனால் முன்பு போல் தினம் வடை பாயாசம் எல்லாம் வேண்டாம். தினம் ஒரு குழம்பு வைத்தால் போதும் சரியா என்று சொல்ல அவரும் சரி என்று தலையை ஆட்டினார்.
தினம் ஒரு குழம்பு என்று வாழ்க்கை ஓடியது. பெரும்பாலும் அரசு அதிகாரி சாப்பிட்டு முடித்த பின் அப்புறமாக தான் அவர் சாப்பிடுவார்.
ஒருநாள் சாப்பிட்டு முடித்த பின் சற்று ஓய்வு எடுத்தவர். சமையல் அறை சென்று பார்த்தவருக்கு ஆச்சரியம்.
அங்கே சமயல்காரர் வடை பாயாசத்துடன் சாப்பிட்டு கொண்டிருக்க. என்னையா போன வாரம் தானே சொன்னேன் இனி ஒரு குழம்பு சமைத்தால் போதும் என்று அப்புறம் எதற்கு வடை பாயாசம் என்று கேட்க.
அதற்கு சமையல் காரர் சிரித்து கொண்டே சொன்னாராம்.
ஐயா....... நீங்கள் தான் ரிடயர்ட் ஆகிட்டிங்க, நான் இன்னும் வேலையில் தான் இருக்கேன் என்று சொல்ல ! அரசு அதிகாரி என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·