-
- 3 friends

இன்றைய ராசி பலன் – ஜுன் மாதம் 9, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, வைகாசி மாதம் 27 ஆம் தேதி
மேஷம் -ராசி:
பயணங்களால் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் சாதகமாக அமையும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப வரவுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம் ராசி:
குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தாமதம் மறையும். உடல் தோற்ற பொலிவுகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் சற்று குறையும். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்
மிதுனம் -ராசி:
மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களால் மாறுபட்ட தருணம் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கடகம் -ராசி:
மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களால் மாறுபட்ட தருணம் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம் -ராசி:
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். எதிர்பாராத சிலருடைய அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்நீலம்
கன்னி -ராசி:
கடினமான பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்கள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். சில அனுபவங்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம் -ராசி:
பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் பொறுமை காக்கவும். தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். காப்பகப் பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்- ராசி:
குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சக வியாபாரிகளால் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். ஆர்வமின்மையான நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு -ராசி:
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம் -ராசி:
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவுகளின் மத்தியில் மதிப்பு உயரும். அரசால் அனுகூலம் ஏற்படும். பிரச்சனைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம் –ராசி:
குடும்பத்தில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பணிகளில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலையாட்களின் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நிர்வாக துறைகளில் பொறுமை வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம் -ராசி:
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். மாமன் வழி உறவுகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·