-
- 3 friends
இன்றைய ராசி பலன் – மே மாதம் 23, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, வைகாசி மாதம் 10 ஆம் தேதி
மேஷம் -ராசி:
மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கூறுவதை தவிர்க்கவும். வாகன பராமரிப்பு தொடர்பான செலவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். திடீர் செலவுகளின் மூலம் கையிருப்பு குறையும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
ரிஷபம் ராசி:
வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல செய்திகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். கலகலப்பான பேச்சுக்களால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம் -ராசி:
கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம் -ராசி:
உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்களிடத்தில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம் -ராசி:
நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக அமையும். தாய் வழி உறவுகளிடத்தில் மதிப்பு உண்டாகும். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி -ராசி:
சொத்து பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியம் கைகூடும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம் -ராசி:
வாசனை திரவிய பணிகளில் மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக அமையும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
விருச்சிகம்- ராசி:
விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மறைமுக தடைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். வீடு மாற்றம் சார்ந்த எண்ணம் மேம்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
தனுசு -ராசி:
கனிவான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் இருந்தாலும் சமாளிப்பதற்கான சூழல் அமையும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பிரீதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம் -ராசி:
மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
கும்பம் –ராசி:
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம் -ராசி:
கலை துறைகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·