-
- 3 friends
வீட்டில் எந்த மரம் வளர்த்தால் நல்லது?
பெரும்பாலான வீடுகளில் உள்ள தோட்டங்களில் பல வகையான மரங்கள், செடிகளை வளர்த்து வருகிறார்கள். எல்லா வகையான மரங்களையும் வீட்டில் வளர்ப்பதில் தப்பில்லையே என பலரும் நினைப்பார்கள். ஆனால் நம் வீட்டுத்தோட்டத்தில் மரம் வளர்ப்பதற்கும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திர முறைப்படி, குறிப்பிட்ட சில பழ மரங்கள் நேர்மறையான விளவுகளையும் சில மரங்கள் மோசமான விளைவுகளையும் தரும் என நம்பப்படுகிறது.
பல மரங்களும் செடிகளும் நேர்மறையான விளைவுகளை தரக்கூடியதுதான் என்றாலும் சில குறிப்பிட்ட மரங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. அதன்படி வீட்டுத் தோட்டங்களில் பழம் தரும் மரங்களை வளர்ப்பது மங்களகரமானது மட்டுமின்றி நம் வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றலையும் விரட்டியடித்துவிடும். ஆகையால் வீட்டில் மரம் வைக்க வேண்டும் என விரும்பினால் பழ மரங்களை நடுவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
சில குறிப்பிட்ட பழ மரங்கள் மங்களகரமானது மட்டுமின்றி நம் வீட்டிலுள்ள வாஸ்து கோளாறுகளையும் சரி செய்யக் கூடியது என நம்பப்படுகிறது. நம்முடைய செல்வம், வளம், ஆரோக்கியம் ஆகியவற்றில் ஏற்படும் மோசமான விளைவுகளை, கிரக சூழ்நிலைகளை தடுக்கும் வல்லமை இந்த வகையான மரங்களுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. வீட்டைச் சுற்றிலும் பழ மரங்களையும் செடிகளையும் நடும்போது கெட்ட ஆவிகள் விலகி, உங்களுக்கு செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் சங்கடமில்லா வாழ்க்கையையும் தருகிறது.
நெல்லிக்காய், கொய்யா, மாதுளை, பப்பாளி, வாழை, தென்னை, கிவி, ஆரஞ்சு போன்ற பழ மரங்களை வீட்டில் வளர்த்தால் மங்களம் வந்து சேரும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதே சமயம், ப்ளம்ஸ், அன்னாசி, பேரீட்சை போன்ற மரங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை உள்ளதால், இதை வீட்டின் அருகில் எக்காரணம் கொண்டும் வளர்க்காதீர்கள் எனக் கூறப்படுகிறது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·