-
- 3 friends
இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 20, 2024
இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 20, 2024
தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 8 ஆம் திகதி | |
மேஷம் Aries
| சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சிறு துரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் |
ரிஷபம் Taurus | குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் அலச்சல்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் விவேகம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் |
மிதுனம் Gemini | பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களிள் கவனம் வேண்டும். புதிய முயற்சிகள் தாமதமாகி நிறைவேறும். தொழில் சார்ந்த பயணங்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் |
கடகம் Cancer | ஆரோக்கியத்தில் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் அணுகூலம் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் |
சிம்மம் Leo | உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சபை தொடர்பான பணிகளில் ஆதரவு கிடைக்கும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் |
கன்னி Virgo | பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை |
துலாம் Libra | குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும். மனதில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : நீலம் |
விருச்சிகம் Scorpio
| குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் கால விரயம் உண்டாகும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் |
தனுசு Sagittarius | சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். வருமான வாய்ப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை |
மகரம் Capricorn | செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் |
கும்பம் Aquarius | விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். வியாபாரம் சார்ந்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் |
மீனம் Pisces | நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களின்மீது ஆர்வம் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆலோசனை வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·