- · 5 friends
-
I

உலகையே அச்சுறுத்தும் பக்கவாதத்தின் அறிகுறிகள்
பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட கார்டியோ வாஸ்குலர் நோய் பாதிப்பும் அதனால் ஏற்படும் மரணத்தின் விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணம் அதுபற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாதது தான்.
பக்கவாதத்தின் அறிகுறிகளை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு வரும் பக்கவாதத்தையும் அதன் அறிகுறிகளையும் நாம் அதிகமாக அலட்சியம் செய்கிறோம் என்று தான் மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
பக்கவாதம் என்பது ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிற ஒரு அவசர நிலை பிரச்சினை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது உடனடியாக கவனிக்கப்படாமல் போனால் மரணம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் தடைபடும். அந்த சமயத்தில் மூளை, இதயம் இரண்டுமே குழப்பமடையும். இந்த நிலையைத் தான் பக்கவாதம் என்று குறிப்பிடுகிறோம். பக்கவாதம் ஏற்படுவதற்கு முன் ஆண், பெண் இருவருக்குமே சில அறிகுறிகள் தோன்றும்.
முகம் ஒரு பக்கமாக சாய்ந்துவிடும். இயல்பாக சிரிக்க சிரமப்படுவார்கள். அப்படி சிரிக்கும்போது வாய் கோணிப்போய்விடும். கண்ணும் முகம் திரும்பிய பகுதியில் சரியாக இருக்காது.உடல் பாகங்களில் உணர்வு இல்லாத நிலை ஏற்படும். குறிப்பாக கைகளைத் தூக்கி வைத்திருக்க முடியாது. எடை அதிகமாக கைகளில் தூக்க முடியாது. பேசுவதற்கு சிரமமாக இருக்கும். வாய் குழறும். அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதே சிரமமாக இருக்கும்.இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனே மருத்துவரை நாட வேண்டியது அவசியம். சோர்வு, மூளை ஸ்தம்பித்து போவது, விக்கல், கடுமையான தலைவலி, பொதுவான பலவீனம், நெஞ்சு வலி, மூச்சு திணறல், வாந்தி, குமட்டல், உணர்வு இழப்பு, பெண்களுக்கு வரும் பக்கவாதத்தின் அறிகுறிகள் ஆண்களுக்கு வருவதைப் போல வெளிப்படையாகவோ பெரிய அளவிலோ வருவதில்லை. அவை மிக நுட்பமாக வெளிப்படுகின்றன.மிக நுட்பமாக வெளிப்படுகிற அறிகுறிகள் காலப்போக்கில் தீவிரமடையும். 2019 இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் நம்முடைய மூச்சு மற்றும் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் மெடுல்லாவில் பாதிப்பு ஏற்படுவதால், பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும்போது விக்கல் ஏற்படுகிறது.அதற்காக விக்கல் வந்தாலே பயப்படத் தேவையில்லை. மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து விக்கலும் வரும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஈஸ்ட்ரஜென் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. அவை மூளையை காயங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கும் தன்மை கொண்டது. அதோடு இந்த ஹார்மோன் மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லக்கூடிய கரோடிட் தமனியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. அந்த ஹார்மோனில் மாற்றங்கள் நிகழும்போது பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படலாம். பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள், ஹார்மோன் மாற்று சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கும் பக்கவாதத்தின் ஆபத்து அதிகம். ஆண்களுக்கு நடுத்தர வயது முதலே பக்கவாதத்திற்கான வாய்ப்பு அதிகம். பெண்களில் பெரும்பாலும் வயதான பிறகு தான் பக்கவாதம் உண்டாகிறது. விக்கலுடன் சேர்த்து வாந்தியும் வந்தால் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·