- · 5 friends
-
I

5 ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவை
உடலில் ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும் போது ஆரம்பத்தில் அது மெல்லிய சிறு சிறு உடல் அசௌகரியங்களை ஏற்படுத்தும். அப்போதே நாம் கண்டு கொள்ளாமல் விடும்போது உடல் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடையும்.
அதையடுத்து உடலில் ஆரோக்கியப் பிரச்சினைகள் உண்டாகும். ஆரம்பத்திலேயே சிறு சிறு அறிகுறிகள் தோன்றும்போதே சரிசெய்து கொள்வது நல்லது. நம்முடைய உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்தில் ஒன்று இரும்புச்சத்து என்று சொல்லலாம்.
இரும்புச்சத்து தான் உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் வேலையைச் செய்கின்றன. உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது உடல் பலவீனம், சருமம் வெளிறிப் போதல், அதிகப்படியான சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
வைட்டமின் டி நம்முடைய உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் தேவைப்படுகிற அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் டி மனச்சோர்வைத் தடுக்கும், உடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்யும்.இந்த வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்போது, உடல் பலவீனம், சோர்வு, தசைகள் வலுவிழப்பது, எலும்புகளில் வலி மற்றும் அடிக்கடி தொற்று நோய்கள் ஆகியவை ஏற்படும். நம்முடைய உடலின் உயிரணுக்களில் உள்ள டிஎன்ஏ மற்றும் மரபணுக்களை உருவாக்குவதில் வைட்டமின் பி12 மிக இன்றியமையாதது. உடலின் நரம்பு செல்களை பலப்படுத்தவும் ரத்த ஓட்டத்தை சீர்செய்யவும் உதவும். வைட்டமின் பி12 உடலில் குறையும்போது உடல் சோர்வு, பலவீனம் கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வுகள் உண்டாகலாம். சருமத்தின் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படும்.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் எலும்புத் தேய்மானத்தைத் தடுத்து அடர்த்தியைப் பராமரிக்கவும் கால்சியம் முக்கியமானது. குறிப்பாக பெண்களுக்கு மிக அவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று. கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் போது எலும்புகள் பலவீனமாவது, எலும்புகளில் வலி, தசைகளில் கூச்ச உணர்வு, மரத்துப் போதல், நகங்கள் உடைதல் ஆகிய அறிகுறிகள் தெரியும்.
வைட்டமின் ஏ உடலுக்குத் தேவையான அடிப்படையான உயிர்ச்சத்துக்களில் மிக முக்கியமானது என்று சொல்லலாம். கண் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவக் கூடியது. வைட்டமின் ஏ பற்றாக்குறை உடலில் ஏற்படும் போது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து அடிக்கடி நோய்த்தொற்றுக்களை உண்டாக்கும். சருமம் அதிகமாக வறட்சி அடையும், மாலைக்கண் நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகும்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·