Category:
Created:
Updated:
நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தை குளத்தில் அமைந்துள்ளது வீரபுத்திரசுவாமி கோவில். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஆண்கள் மட்டுமே வழிபட்டு வருவதுதான். மேலும் ஆண்கள் மட்டுமே சுவாமிக்கு பூஜைகள் உள்பட பல்வேறு பணிவிடைகளை செய்கின்றனர்.
பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.