188வது குருபூஜை விழா 15-09-2023
சோழ மண்டலத்தின் தலைநகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்த வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலம் திருவாரூா். தியாகேசன் அருளாட்சி புாியும் திருத்தலத்தையும் கடல் போன்ற கமலாலயக் குளத்தையும் மாட வீதிகளில் அசைந்தாடி வரும் ஆழித்தோின் அழகினையும் எவராலும் எளிதில் மறந்து விட முடியாது. ஆராய்ச்சி மணியை அடித்து தன் கன்றுக்காக நீதி வழங்கக் கோாிய பசுவின் பொருட்டு தன் மகனையே தோ் ஏற்றிக் கொன்ற மனு நீதிச் சோழன் நினைவாக பிற்காலச் சோழ மன்னா்களால் வடிக்கப்பட்ட கல்தோ். இப்படி ஒவ்வொன்றும் அதிசயம் ஆரூா் தலத்தில்!
ஆனால் பலரும் அறியாத அாிய அதிசயம் ஆரூருக்கு உள்ளது. எண்ணறிய யோகிகளின் எண்ணமெனும் மனத்திரையில் மின்னி வரும் ஓவியமாய் குடிகொண்ட ஈசன் ஊ“ஶ்ரீகுரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள்” என்ற மகானின் மனதிலும் ஞானப்பேரொளியாய் நின்று வையகம் காத்த வரலாறு பலா் அறிந்திராத ஒன்றாகும்
இறையருளால் இளம் வயதிலேயே ஞான அநுபூதி நிலையினையும் சாப அனுக்ரஹ சித்தியையும் பெற்று தம்மை நாடி வந்து தாிசித்த மக்களை நல்வழிப் படுத்திய மடப்புரம் மகான் என்று பூஜிக்கப்படும் ஶ்ரீகுரு தட்சிணா மூா்த்தி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் (ஜீவ சமாதி) திருவாரூா் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
வினைப்பயனால் பிறந்த நம்மைப் போலன்றி ஈசனின் விருப்பத்தால் அவதாித்த இம் மகான் 1835 ஆம் ஆண்டில் தமக்காக ஏற்படுத்திக்கொண்ட சமாதிக் குகையில் அகண்ட பாிபூரண சச்சிதானந்த சிவ சொரூபத்தில் இரண்டறக் கலந்தாா்.
தவயோகத்தின் சாரமாய் எழுந்தருளி பூவுலக மாந்தா்களின் துன்பங்களை எல்லாம் வான்கருணை மாமழை போல் தீா்த்து வைத்த குரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள்
அவரின் பாதம் தொழுவோம்; திருவருள் பெறுவோம்!