-
- 2 friends

அருகம்புல்லும் விநாயகரும்
விநாயகரின் உள்ளங்கவர் மூலிகை அறுகம்புல் ஆகும். நோய் தீர்க்கும் மூலிகைகளின் முன்னோடியாக விளங்குவது அருகம்புல்.
மன ஒருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உடலைப் பேணவும் நடமாடும் தெய்வமாகத் திகழ்வது தெய்வீக மூலிகைகளேயாகும். அவ்வகையில் அருகம்புல் மகிமை மிக உன்னதமானது.
விநாயகருக்கு உண்டான அதீதப் பசிநோய்க்கும் அருகம்புல்லே உணவாக தரப்பட்டு நிவர்த்திக்கப்பட்டதாக விநாயகப் புராணம் கூறுகிறது.
விநாயகப் பெருமான் ஒரு தடவை தேவர்களை காக்கும் பொருட்டு கொடியவனாகிய அனலாசுரனை விழுங்கி விட்டார்.
இதன் காரணமாக அனலாசுரனின் கடும் வெப்பம் விநாயகரை தாக்கியது. இந்த வெப்பத்தால் விநாயகர் வயிற்றில் சூடு அதிகமாகி விட்டது. அதனால் தேவர்கள் அனைவர் வயிற்றிலும் கடும் கொதிப்பு உண்டானது. அனலைத் தணிக்க தேவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தனர். ஆனால் என்ன செய்தும் பலனில்லை. அப்போது அங்கு வந்த முனிவர்கள் ஒவ்வொருவரும் 21 அருகம்புற்களை விநாயகருக்கு சாத்தினர். உடனடியாக விநாயகரின் திருமேனி குளிர்ந்து விட்டது.
அனைவரின் வயிற்றிலும் கொதிப்பு நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டது. அன்று முதல் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.
சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருப்பவர்கள் விநாயகருக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகித்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது.
ஆரோக்கியம் பெற, உடல் கொதிப்பு தணிய நாமும் அருகம்புல் ஜூஸ் பருகலாம்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·