- · 5 friends
-
I

காலை உணவில் கட்டாயம் தவிர்க்கவேண்டியவை
புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோய் என்பதும், இது மிகவும் துரிதமாக அதிகரித்து வருவதும் கவலைகளை ஏற்படுத்துகிறது. மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்பவர்களும், இந்த கொடும் நோயில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்பது வருத்தம் தரும் செய்தி.
புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால், அதன் சிகிச்சை கடினமாகிவிடும். புற்றுநோய் என்பது தற்போது சிகிச்சை செய்து குணப்படுத்தக்கூடியது என்ற நிலைக்கு மருத்துவம் முன்னேறிவிட்டாலும், நோய் வந்தால், ஏற்படும் சிரமங்களும், செலவுகளும் எண்ணற்றவை.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதும், இறப்பதையும் உலக சுகாதார அமைப்ப்பு பதிவு செய்துள்ளது. நோய்களால் ஏற்படும் ஒவ்வொரு 6 இறப்பில் ஒன்று புற்றுநோய் என்பது, நிலைமையின் விபரீதத்தை புரிந்துக் கொள்ள ஒரு உதாரணமாகும்.
புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால், முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் நாம் உண்ணும் உணவு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக 5 முதல் 10 சதவீத புற்றுநோய்கள் மட்டுமே மரபணுக்கள் மூலம் தோன்றுபவை. 95% புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம், வாழ்க்கை முறை.
கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்த உணவுகளை உண்பதைத் தவிர்த்தால், அதிக நன்மை என்றாலும், தவிர்க்க முடியாது என்ற நிலையில், குறைந்தபட்சம் காலை நேரங்களில் உண்பதை தவிர்ப்பது சிறந்தது.
ஏனென்றால், இந்த உணவுகளை காலை உணவாக உண்ணும்போது, இரவு முழுவதும் காலியாக இருக்கும் வயிற்றில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி, நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.
காலை வேளையில், தேநீருடன் பிஸ்கட்களை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயை உண்டாக்கும்.அதிலும் பதப்படுத்தப்பட்ட குக்கீகள் கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது.
காலை உணவில் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது. அதிலும், காலை உணவில் தேநீருடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவது நோயை நாமே வரவேற்பதற்கு சமம் என்றே கூறலாம். உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியத்தை கெடுக்கும். அதில் பயன்படுத்தப்படும் அதிக அளவு சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு, உடலில் நிறைவுற்ற கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
அதிக வெப்பநிலையில் தயாரிப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனமான அக்ரிலாமைடு அதிகரிக்கிறது, அதனால்தான் காலை உணவில் தேநீருடன் உருளைக்கிழங்கு சிப்ஸை உட்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் இருந்து தயாரிக்கப்படும் உணவின் நுகர்வு அதிகரித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பல வகையான புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் உள்ளன, இதன் காரணமாக புற்றுநோயின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது.
சிவப்பு இறைச்சி பல நாள்பட்ட நோய்களுக்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை காலை உணவில் உட்கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·