- · 6 friends
-
S
N
R
திருவண்ணாமலை அடிமுடி சித்தர்
கிரேன் கருவி இந்தியாவுக்குள் வராத காலம். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பல நூறு டன் எடை உள்ள ஒரு சிறிய மலையை போன்ற ராக்ஷத பாறை இருந்தது. அந்த பாறை மக்கள் கிரிவலம் செய்வதற்கு மிக இடையூறாக இருந்தது.
10,15 காட்டு யானைகளை வைத்து அந்த பாறையை அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் பலன் இல்லை. அப்பொழுது அங்கு ஒருவர் வந்தார். 27 அடி நீளமுடைய தலைமுடியை கொண்டவர் அவர்.
அந்த பாறையை தனது ஜடாமுடியில் கட்டி தனி ஒருவராக இழுத்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தூக்கி வீசி எரிந்தார். அவர்தான் அடிமுடி சித்தர்.
ஸ்ரீ சக்கர அம்மாவின் குரு தான் அடிமுடி சித்தர்.
மறக்காதிரு, பிறக்காதிரு, இறக்காதிரு என்னும் உபதேசத்தை ஸ்ரீ சக்கர அம்மாவிற்கு உபதேசம் செய்தவர் அடிமுடி சித்தர்.
இறைவனை மறக்காத்திருந்தால் நீ இன்னொரு பிறவி பிறக்காது இருப்பாய்.
இன்னொரு பிறவி நீ பிறக்காது இருந்தால் இறக்காது இருப்பாய் என்பதே இதன் அர்த்தம்.
அடிமுடி சித்தர் பல அற்புத சித்துக்களை சர்வ சாதாரணமாக செய்தவர்.
ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள்
ஆகியோருக்கெல்லாம் மூத்தவர். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகிராம் சுரத் குமார் முதலான மகான்களால் வழிபடப்பட்டவர். மிக குறிப்பாக அடிமுடி சித்தர் ஜீவசமாதி அடைந்தவர்.
அடிமுடி சித்தருக்கு மிகவும் பிடித்த உணவு கேழ்வரகு.
கேழ்வரகு கஞ்சி, கேப்பங்கூழை மட்டுமே இவர் உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்.
ஸ்ரீ சக்கர அம்மா அடிமுடி சித்தரை தரிசித்து உபதேசம் பெரும் பொழுது. கேப்பங்கூழை தான் அவருக்கு குரு தக்ஷணையாக தந்தார்.
அடுத்த முறை நீங்கள் அடிமுடி சித்தரை தரிசிக்க செல்லும் பொழுது கேழ்வரகு மாவை, முடிந்தால் கஞ்சி, கூழை இவருக்காக கொண்டு செல்லுங்கள்.
அடிமுடி சித்தருக்கு கேழ்வரகு, பூ, நல்லெண்ணெய் ஆகிய மூன்றை காணிக்கையாக கொடுத்து. முடிந்தால் ஒரு வேட்டி. கொடுத்து நாம் வேண்டி கொண்டால். நமது அனைத்து துன்பங்களும், துயரங்களும் தூள், தூளாகும் என்பது நிதர்சனம்.
இவரின் ஜீவசமாதி கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்திற்கு மிக அருகே இருக்கிறது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·