பாவங்களை போக்கி, அளவில்லாத புண்ணிய பலன்களை தரும் மாதமாக இந்த மாசி மாதம் இருக்கிறது. மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாளை மாசி மகம் என கொண்டாடுகிறோம். இது பல்வேறு ஆன்மிக சிறப்புக்களை பெற்ற நாளாகவும் உள்ளது. பாவங்களை போக்கி, அளவில்லாத புண்ணிய பலன்களை தரும் மாதமாக இந்த மாசி மாதம் இருக்கிறது. இந்த மாதம் பொதுவாக சில வழிபாடு செய்ய உகந்த மாதமாக சொல்லப்படுகிறது.
மாசி மாதத்தில் வரும் மாசி மகம்,இந்த நாளில் தான் முருகப் பெருமான், தன்னுடைய தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது.
பாதாள உலகத்தில் இருந்து பூமியை பெருமாள், வராக அவதாரம் எடுத்து மீட்டு வந்ததும் மாசி மகம் நாளில் தான். அதனால் இந்த நாளில் சிவ பெருமான், அம்பாள், முருகப் பெருமான், பெருமாள், முன்னோர்கள், குலதெய்வம் என எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம். மாசி மகம் அன்று விரதம் இருந்து, வழிபடுவதால் சகல விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி புதன்கிழமை மாசி மகம் அமைகிறது. அன்றைய தினம் அதிகாலை 03.53 மணி துவங்கி, மார்ச் 13ம் தேதி காலை 05.09 வரை மகம் நட்சத்திரம் உள்ளது. அதே போல் மார்ச் 12ம் தேதி காலை10.50 மணி துவங்கி சதுர்த்தசி திதி உள்ளதால் சிவ வழிபாடு செய்வது மிக உகந்தது. சதுர்த்தசி, சிவனுக்குரிய திதி ஆகும்.
அதிகாலை 03.53 மணி துவங்கி, மார்ச் 13ம் தேதி காலை 05.09 வரை மகம் நட்சத்திரம் உள்ளது.
இந்த திதியில் வழிபடுபவர்களுக்கு சிவ பெருமானின் அருளும், பாவங்களில் இருந்து விடுதலையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை இல்லாத தம்பதிகள் மாசி மகம் அன்று புனித நீராடினால் அவர்களுககு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த மாசி மகம் நாளில் ஜென்ம பாவங்கள் தீர்க்கும் கும்பகோணம் மகாமகம் குளம் கடல், நதிகள், கோவில் குளங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர் கோவில் குருக்கள்.
- 273