வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்கள் பலரும் ஏதாவது ஒரு காரியம் நல்லவிதமாக நடைபெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த காரியத்தை செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே செல்வார்கள். அந்த சமயத்தில் யார் வருகிறார்கள்? சகுனம் நன்றாக இருக்கிறதா? இவர்களை பார்த்துவிட்டு சென்றால் இந்த காரியம் வெற்றி அடையும் என்று பலவிதமான விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். இன்னும் சிலரோ தங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு அந்த தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு இந்த காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு செல்வார்கள். இப்படி செல்லும் பொழுது அந்த வேண்டுதலோடு மட்டை தேங்காய் வழிபாட்டையும் சேர்த்து செய்தால் அந்த காரியம் வெற்றி அடையும். அந்த மட்டை தேங்காய் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மட்டைத் தேங்காய் வழிபாடு:
ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்று ஒன்று இருக்கும். குலதெய்வம் தெரியாதவர்களும் இருப்பார்கள். ஆனால் அனைவருக்குமே இஷ்ட தெய்வம் என்ற ஒரு தெய்வம் இருக்கும். சதா சர்வ காலம் நம்மை அறியாமலேயே நம்முடைய வாயிலிருந்து ஒரு தெய்வத்தின் பெயர் வந்து கொண்டே இருக்கும். அந்த தெய்வம்தான் இஷ்ட தெய்வம். அந்த தெய்வத்தின் அருளை பெற்று நாம் செல்லக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றி அடையும். அப்படி அந்த இஷ்ட தெய்வத்தின் அருளை பெறுவதற்கு உதவுவதுதான் மட்டை தேங்காய் வழிபாடு.
சுப நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு வீட்டை விட்டு கிளம்பினாலோ அல்லது ஒரு வேலை நிமித்தமாக செல்வதாக இருந்தாலோ அல்லது தொழில் ரீதியாக ஒரு முக்கியமான பேச்சு வார்த்தைக்கு செல்வதாக இருந்தாலோ அல்லது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் மனை வாங்க வேண்டும் அதற்காக செல்கிறோம் என்றாலோ இப்படி நம்முடைய வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடைபெறுவதற்காக நாம் வீட்டை விட்டு வெளியே செல்வோம். அவ்வாறு செல்வதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபாடு செய்வோம். அப்படி குலதெய்வத்தை வழிபாடு செய்வதோடு நம்முடைய இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்வோம்.
அப்படி இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யும்பொழுது இந்த மட்டை தேங்காயை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு ஒரு மட்டை தேங்காய் ஒன்று வேண்டும். அதை சுத்தம் செய்து அதற்கு ஒரே ஒரு இடத்தில் மஞ்சளை வைத்து அதற்கு மேல் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய இரண்டு கைகளிலும் வைக்க வேண்டும். இப்பொழுது உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் பெயரைக் கூறி இஷ்ட தெய்வத்தின் மந்திரம் ஏதாவது தெரியும் என்றால் அந்த மந்திரத்தையும் கூற வேண்டும். பிறகு என்ன காரியமாக நீங்கள் வீட்டை விட்டு செல்கிறீர்களோ அந்த காரியத்தை சொல்லி அது வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த தேங்காயை இஷ்ட தெய்வத்தின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதற்குள் வைக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வாசனை நிறைந்த மலர்களை அந்த மட்டை தேங்காய்க்கு சமர்ப்பணம் செய்துவிட்டு வீட்டை விட்டு கிளம்ப வேண்டும். அந்த வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் இந்த மட்டை தேங்காயை எடுத்து இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்கு சென்று சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும். இப்படி எந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று மட்டை தேங்காயை வைத்து வழிபாடு செய்தோமோ அந்த காரியம் விரைவிலேயே வெற்றி அடையும்.
இஷ்ட தெய்வத்தை முழு மனதோடு இந்த முறையில் மட்டை தேங்காயை வைத்து வழிபாடு செய்து விட்டு நாம் செல்லக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றி பெறும்.
- 1202