Feed Item
Added a post 

குதிரை முகமும், மனித உடலும் கொண்டு உருவானவர் ஹயக்ரீவர். இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவர் கல்வித் தெய்வமாகக் குறிப்பிடபடுகின்றார். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை.

அவதாரக் காரணம்

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை மது ,கைடபன் என்ற அசுரர்கள் பறித்துக் கொண்டு பாதாள லோகத்திற்கு சென்று விட்டனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர் .அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். அந்த உருவமே ஹயக்ரீவர். மது , கைடபனும் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார் ஹயக்ரீவர்.

லட்சுமி ஹயக்ரீவர்

மது, கைடபனுடன் போரிட்டு அவர்களை அழித்தப்பிறகும் ஹயக்கீரீவருக்கு உக்கிரம் தணியாததால், லட்சுமி தேவியை அவர் மடியில் அமரச்செய்தனர் தேவர்கள். இத்திருவுருவத்திற்கு 'லட்சுமி ஹயக்ரீவர் ' என்று பெயர். ஹயக்ரீவருக்கு கல்வி கருவாக அமைந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனாருப்பதால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்ரீவர் வணங்கப்படுகிறார்.

ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்

தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையான வரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்னும் பொருளுடைய ஸ்தோத்திரம்.

" ஞானானந்த மயம் தேவம்

நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்

ஸர்வ வித்யானாம்

ஹயக்ரீவம் உபாஸாமஹே"

மாணவ மாணவியர் ஹயக்ரீவ மந்திரங்களை ஓதி, கல்வித் தெய்வமான ஹயக்ரீவரை வணங்கி வெற்றி பெற வாழ்த்துகள்.

  • 697