Ads
லொஸ்லியாவின் தந்தை கனடாவில் மாரடைப்பால் உயிரிழந்தார்
பிக் பாஸ் 3ல் பங்கேற்று புகழ் அடைந்த லொஸ்லியா தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார். அவரது தாயும் இரு சகோதரிகளும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். அவரது தந்தை வேலை நிமித்தமாக கனடாவில் வாழும் போது மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார். லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அவரது உடலை தாய்நாடான இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது லொஸ்லியா இலங்கை செல்வதற்காக அனுமதி கோரியுள்ளார்.
Info
Ads
Latest News
Ads