
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியது
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப்பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த ஊரடங்கு 21-ம் தேதி (இன்று) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கடந்த 19-ந் தேதி மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், நோய்த்தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த ஊரடங்கை 28-ம் தேதி காலை 6 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டது.
மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.