Ads
ஒன்ராறியோவில் மீண்டும் தினசரி சாதனையை முறியடித்து கோவிட்-19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை 07-12-2020) ஒன்ராறியோவில் கோவிட்-19 சாதனை அளவாக 1,925 பதிவாகியுள்ளது. டொராண்டோவில் 601 புதிய தொற்றுநோய்களுடன் முன்னிலை வகிக்கிறது, பீல் பிராந்தியம் 512 உடனும், யோர்க் பிராந்தியம் 167 உடனும், துர்காம் பிராந்தியம் - 133, ஹால்டன் பிராந்தியம்- 54, ஹாமில்டன்- 76 கோவிட்-19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இருபத்தி ஆறு பேர் இறந்துள்ளனர், இதனால் இறப்பு எண்ணிக்கை 3,798 ஆக உள்ளது.இன்று மாகாணத்தில் 138 பள்ளிக்கூடங்கள் தொடர்பான புதிய கோவிட்-19 தொற்று பதிவாகியுள்ளன. மாகாணத்தில் மொத்தம் 803 பள்ளிகளில் கோவிட் தொற்று உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுகளில் இப்போது 213 நோயாளிகள் உள்ளனர், வென்டிலேட்டர்களில் 121 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads