வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியமையே இலங்கையினால் ஒரு நாடாகக் காலூன்றி நிற்க முடிந்தது - அமைச்சர் மனுஷ நாணயக்கார
”வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியமையினாலேயே இலங்கையினால் ஒரு நாடாகக் காலூன்றி நிற்க முடிந்தது” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” –
கடந்த 2022 ஆம் ஆண்டில் இது 3 பில்லியன் டொலர்களாக குறைந்து போனது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 பில்லியன் டொலர்களை வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர் ” இவ்வாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலுதெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000