·   · 50 jokes
  •  · 5 friends
  • I

    9 followers

அதிர்ச்சி (வாய்விட்டு சிரிங்க.. நோய்விட்டுப்போகும்.....)

ரொம்ப படிச்ச அமெரிக்க டாக்டர் ஒருத்தரு இந்தியாவுக்கு வந்தாரு. பைசா செலவில்லாம ஹார்ட் அட்டாக்க குணப்படுத்தறதுல கில்லாடி. அந்த வித்தைய எப்படியாச்சும் அவர் கிட்டே இருந்து படிச்சிடணும்னு துடிச்சுக்கிட்டிருந்த இந்திய டாக்டர்கள்கிட்ட சொன்னாரு,


"இந்த உலகத்துல என் கால் படாத இடம் கிடையாது. ஏழு அதிசயத்தையும் பார்த்துட்டேன். உங்க இந்தியாவுல எனக்கே அதிர்ச்சி தர்ற எதையாவது காட்டுனீங்கனா நீங்க ஆசைப்படுற வித்தைய ஓசிக்கு சொல்லித் தருவேனு"


அவ்வளவு தான் அவருக்கு கடல் மேலே கட்டப்பட்ட பாலம்னு பாம்பன் பாலத்த காட்டினாங்க. "எங்க நாட்டுல ரெண்டு தீவுக்கு நடுவுலேயே பாலம் இருக்கு. இதெல்லாம் ஜூ ஜூபி" னுட்டாரு.


தாஜ் மஹாலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. "எங்க வெள்ளை மாளிகைல உள்ள ஒரு ரூம் விலை பெறுமாய்யா" னு கேட்டாரு.


எதை எதையோ காட்டியும் "எனக்கு அதிர்ச்சியே வரல"னு சொல்லி அமெரிக்கா கிளம்ப ஏர்போர்ட்டுக்கு போகும்போது வழில இருந்த சின்ன ரயில்வே ஸ்டேஷனப் பார்த்ததும் உள்ளே போகணும்னு சொன்னாரு. அவருக்கு அதிர்ச்சி தர்ற மாதிரி எதையும் காட்ட முடியலயேங்ற சோகத்துல மூஞ்சிய தொங்கப் போட்டு உள்ளே கூட்டிட்டுப் போனாங்க இந்திய டாக்டருங்க.


ஸ்டேஷன சுத்திப் பார்த்துகிட்டிருந்த அமெரிக்க டாக்டர் ஒரு தள்ளு வண்டி புக் ஸ்டாலப் பார்த்ததும் திடீர்னு "ஐயையோ எங்கப்பா சொத்துல பாதிய வித்து  எனக்கு வாங்கி கொடுத்தது இங்க இவ்வளவு சீப்பா கிடைக்குதா இந்த அதிர்ச்சிய என்னால தாங்க முடியலியேனு கத்தி நெஞ்ச பிடிச்சுக்கிட்டே கீழே விழுந்து மாரடைப்புல மண்டைய போட்டுட்டாரு.


இரும்பு மனுசன் மாதிரி இருந்த ஆளுக்கே அதிர்ச்சி தந்த விசயம் என்னானு தள்ளு வண்டி புக் ஸ்டாலப்பார்த்தாங்க இந்திய டாக்டருங்க.......


முப்பது நாட்களில் நீங்கள் டாக்டர் ஆவது எப்படி விலை ரூ.20/-


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 37
  • More
Comments (0)
    Latest Jokes (Gallery View)
    1-14
    Info
    Created:
    Updated:
    சிறப்பு நகைச்சுவைகள்
    My new wife
    என் புது பொண்டாடி செய்தது
    Happy Mothers day
    Mothers day
    குதிரை பந்தயம்
    குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வ
    ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, தனது மகளிடம் சொன்னார்."கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு  சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக் கொண்டு  கடைக்கு கிளம்பினார்.அவர் திரும்பி வந்தபோது, அவள் காரில் இல்லை.திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, 200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்." என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்."என்னைத் தடுக்காதீங்க...அப்பா. இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு  நினைக்கிறேன். போன ஜென்மத்துல  நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன். இதப்பத்தி எனக்கு தெரியணும்... நிறைய தெரியணும்