·   · 50 jokes
  •  · 5 friends
  • I

    9 followers

ஜட்ஜ் அய்யா..... என்னை காப்பாத்துங்க....


ஜட்ஜ் அய்யா... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...



ஏம்ப்பா... என்ன நடந்துச்சி



அத ஏன் கேக்குறீங்க அய்யா,.. கடந்த நாலஞ்சு மாசா மாசம் ஒரு புக்க வாங்கிட்டு வந்து என்னய பாடா படுத்துறா



புக்கா... கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க



சொல்றேனுங்க அய்யா...  மொத மாசம் '30 நாட்களில் கராத்தே கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்தா வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்ப ரணகள மாக்கி கராத்தே கத்துகிட்டா நானும் நம்ம பொண்டாட்டி தானேன்னு தாங்கிக்கிட்டேன்



இன்ட்ரஸ்ட்டிங்.



 அப்புறம் அடுத்த மாசம் '30 நாட்களில் வர்மக்கலை கற்றுக்கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்புல கதகளி ஆடிட்டா... நானும் வலிக்காதது மாதிரியே தாங்கிட்டேன்



ப்ச்... மூனாவது மாசம் என்ன புக் வாங்கிட்டு வந்தாங்க...!?



ஐய்யோ...'30 நாட்களில் தற்காப்பு கலையை கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புக்கு க்கு அய்யா... முப்பது நாளும் கொரில்லா தாக்குதல் நடத்தி என்ன நிலைகுலைய வச்சிட்டா சார்.



பாவம் தான் நீங்க... அப்புறம் நாலாவது மாசம் என்ன புக்கு வாங்கிட்டு வந்தாங்க...!?



30 நாட்களில் சார்பட்டா பரம்பரையாவது எப்படி' ங்கிற புக்கு சார்... "முப்பது நாளும் முகம் வீங்காத நாளே இல்லீங்க...



அப்புறம் அஞ்சாவது மாசம் என்ன புக்கு...!?



அதுதான்ங்க அய்யா.  என்  தன் நம்பிக்கையையே தகர்துடுச்சி... அஞ்சாவது மாசம் அவ வாங்கிட்டு வந்த புத்தகத்த பாத்து வெல வெலத்துப்போய் இனிமேலும் வீட்டல இருந்தா நம்ம உயிருக்கு ஆபத்துன்னு காப்பாத்த சொல்லி இங்கே ஓடியாந்துட்டேனுங்க அய்யா..



அவ்வளவு அதிரடியான புக்கா அது... அந்த புக்கு பேரென்ன...!?



30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி" ங்கிற புக்குங்க.. அய்யா ...


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 141
  • More
Comments (0)
    Latest Jokes (Gallery View)
    1-14
    Info
    Created:
    Updated:
    சிறப்பு நகைச்சுவைகள்
    My new wife
    என் புது பொண்டாடி செய்தது
    Happy Mothers day
    Mothers day
    குதிரை பந்தயம்
    குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார்.அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வ
    ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, தனது மகளிடம் சொன்னார்."கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு  சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக் கொண்டு  கடைக்கு கிளம்பினார்.அவர் திரும்பி வந்தபோது, அவள் காரில் இல்லை.திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, 200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்." என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்."என்னைத் தடுக்காதீங்க...அப்பா. இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு  நினைக்கிறேன். போன ஜென்மத்துல  நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன். இதப்பத்தி எனக்கு தெரியணும்... நிறைய தெரியணும்