- · 5 friends
-
I
ஏதோ சம்பந்தம் இருக்கு........
ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு, தனது மகளிடம் சொன்னார்.
"கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக் கொண்டு கடைக்கு கிளம்பினார்.
அவர் திரும்பி வந்தபோது, அவள் காரில் இல்லை.
திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, 200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்.
" என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்.
"என்னைத் தடுக்காதீங்க...அப்பா. இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு நினைக்கிறேன். போன ஜென்மத்துல நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன். இதப்பத்தி எனக்கு தெரியணும்... நிறைய தெரியணும் " என கத்த ஆரம்பித்தாள்.
அப்பாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் திகைப்புடன் முன்னேறிக் கொண்டிருந்தாள்.
" கொஞ்சம்..நில்லுமா" என கெஞ்சினார்.
ஆனால், அவள், அப்பா சொல்வதைக் கேட்காமல்..அந்த கட்டிடத்தை நோக்கி சென்றாள்.
"அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு தெரியறவரைக்கும் நான் ஓயமாட்டேன்பா".
பொறுமையிழந்த அப்பா பளாரென்று மகளின் கன்னத்தில் அறை ஒன்றை விட்டார். கதிகலங்கி போய் நின்ற மகளிடம் சொன்னார்.
"இந்த லீவுல அம்மாவோடவும் பாட்டியோடவும் டிவிசீரியல பார்த்து பார்த்து,உன்மூளை இந்த அளவுக்கு இப்படி மழுங்கிப் போச்சு,
கொரோனாவுக்கு முன்னாடி நீ போன ஸ்கூல்... இது!!!"
- ·
- · GomathiSiva