• 499
  • More
 ·   ·  51 jokes
  •  ·  5 friends
  • I

    9 followers

பட்டிமன்றத்தில் சுவையான பேச்சு....

ஒரு பட்டிமன்றத்தில்  ஒருவர் பேசினார். நடுவரைப் பார்த்துச் சொன்னார்.

"எது நமக்குத் தெரியாததோ, அதை எது நமக்குத் தெரிய வைக்குதோ... அது நமக்குத் தெரியாமயேதான் இருக்கும்.... "

நடுவர் புரியாமல் விழித்தார். அறிவொளி ஐயா விளக்கினார்.

"நடுவர் அவர்களே, உங்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு இது தெரிகின்றதா?" என்று ஒரு பேனாவைக் காட்டினார்.

நடுவர், "இல்லை" என்றார்.

"சரி, இப்பொழுது உங்கள் கண்களைத் திறங்கள். இப்பொழுது இது என்னவென்று தெரிகின்றதா?"

"தெரிகின்றது. அது ஒரு பேனா."

"உங்களுக்குத் தெரியாமல் இருந்த இந்தப் பேனாவை உங்களுக்குத் தெரிய வைத்தது எது?"

"என் கண்கள்."

"உங்கள் கண்கள் உங்களுக்குத் தெரிகின்றதா?"

"இல்லை."

"அதான் சொன்னேன், எது உங்களுக்குத் தெரியாததோ, அதை எது உங்களுக்குத் தெரிய வைக்குதோ, அது உங்களுக்குத் தெரியாமயேதான் இருக்கும்...."

Comments (0)
Login or Join to comment.
Latest Jokes (Gallery View)
1-14