
நடிகை மேகா ஆகாஷ்க்கு திருமணம்
சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வரும் இவர், சத்தமே இல்லாமல் தனது நீண்ட நாள் காதலர் சாய் விஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தப் போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
படவாய்ப்பே இல்லாமல் இருந்த இவர் அசோக் செல்வனுடன் சேர்ந்து சபாநாயகன்படத்தில் நடித்தார். பின் சந்தானம் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். அதன் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் நடிப்பில் உருவாக மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் 2 முதல் வெளியானது. ஆனால் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாததால், படம் வெளியான வேகத்தில் ஓடிடிக்கு வந்துவிட்டது.
நடிகை மேகா ஆகாஷிற்கு அடுத்தடுத்த படவாய்ப்பு வந்த போதும், தனது திறமையை நிரூபிக்கும் வகையில், எந்த படமும் அமையாததால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்த மேகா, தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் கோவளம் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் உள்ள நித்ய பெருமாள் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மிகவும் எளிமையாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் பரவியதை அடுத்து ரசிகர்கள் பலரும் மேகா ஆகாஷிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva