
விவாகரத்து குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட ஜெயம் ரவியின் மனைவி
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான அந்த படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். முதல் படமே ஹிட். ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.
ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டானாலும் பெரும்பாலும் அவை அண்ணன் ராஜா இயக்கும் படங்களாகவே அமைந்தன. இருப்பினும் அப்படி அவர் நடித்த படங்களும் ஹிட்டாக கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
ஆக்ஷன் ஹீரோவாக மாறக்கூடிய படத்துக்காக ஜெயம் ரவி காத்திருக்கவும் செய்தார். அப்படி காத்திருந்தவருக்கு பேராண்மை படம் கிடைத்தது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான அப்படத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞனாக துருவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவி.
படத்துக்கு தேவையான ஆக்ஷனை அளவாகவும், நடிப்பை சிறப்பாகவும் வழங்கிய ரவியை பார்த்து கோலிவுட் ஆச்சரியம்தான் பட்டது. இதனையடுத்து ஆக்ஷன் படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த ரவி தனி ஒருவன் படத்தில் நடித்தார். மெகா ஹிட் தனி ஒருவன்:
தனி ஒருவன் படம்தான் ஜெயம் ரவியை வைத்து ஜெயம் ராஜா இயக்கிய சொந்த கதை ஆகும். ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்த ரவியுடன் அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படம் பெரும் வெற்றிப்பெற்றது.
ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே ஒரு தகவல் ஓடியது. ஆனால் கடந்த மாதம் ஜெயம் படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி; அந்தப் படம் பற்றி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டிருந்தார்.
ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜெயம் ரவியை திருமணம் செய்திருக்கிறேன் என்பதையும் அவர் நீக்கவில்லை. தனது பெயரிலிருந்தும் ரவியை நீக்கவில்லை. இதனை கவனித்த ரசிகர்கள், தனக்கும் ஜெயம் ரவிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை, விவாகரத்தும் இல்லை என்பதை ஆர்த்தி உறுதி செய்திருப்பதாக மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva