நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சில அபூர்வ தகவல்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப் பிரவேசம், 1952ஆம் ஆண்டில் "பராசக்தி' மூலமாகத்தான் என்பதில், ஒரு சிறு திருத்தம் மேற்கொள்ளலாம். ஹெச்.எம்.ரெட்டி என்பவர் தயாரித்து - இயக்கிய "நிரபராதி' என்ற படத்தில், நாயகனாக நடித்த முக்காமலா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, நமது நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்ததன் மூலமாக, "பராசக்தி'க்கு முன்பே 1951 ஆம் ஆண்டிலேயே திரையுலகப் பிரவேசம் செய்துவிட்டார். ("நிரபராதி' தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்.)

கே.வி.மகாதேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி தனித்து இசையமைத்த (4 படங்களில்) ஒரு படம், "குருதட்சணை' என்ற சிவாஜி கணேசன் நடித்த படமாகும்.

சிவாஜி கணேசனுக்கு இயக்கவும் தெரியும். அவர் ஒரு திரைப்படத்தை இயற்றி இருக்கிறார். அவர் முழுப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும், ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று வைத்துக் கொள்ளலாம். "ரத்தபாசம்' என்ற படத்தை இயக்கிய கே.விஜயன் பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் எழுத்துப் பகுதியில் (டைட்டில்) இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் எவரது பெயரும் திரையில் வராமல், சிவாஜி கணேசனின் குளோசப் போட்டோக்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "இரு துருவம்' என்ற படத்தின் கதையை எழுதியவர் இந்தி நடிகர் திலிப்குமார். இது "கங்கா ஜமுனா' என்கிற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "சரித்திர நாயகன்' என்ற படத்தின் கதையை, தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் எழுதியுள்ளார். தெலுங்குப் படத்தில் என்.டி.ஆர்.தான் கதாநாயகன். அதன் தழுவலாக எடுக்கப்பட்ட படம் "சரித்திர நாயகன்'.

சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடிகர் திலகத்திற்காக ஒரு படத்தில் யாராவது ஒருவர் மட்டும் பின்னணி பாடியிருப்பார்கள். ஆனால், "வணங்காமுடி' என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, டி.எம்.சௌந்தரராஜன் ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு பாடல்களுக்குப் பின்னணி பாடியிருப்பார்கள்.

அதேபோல, "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜே.பி.சந்திரபாபு, ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம் ஆகிய மூன்று பேர் பின்னணி பாடியிருப்பார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, வி.என்.சுந்தரம் இரண்டு பாடல்களை பின்னணி பாடியுள்ளார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படத்தில் வெற்றி வடிவேலனே என்ற பாடலையும், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக எஸ்.சி.கிருஷ்ணன், "ராஜா ராணி' என்ற படத்தில் (கண்ணற்ற தகப்பனுக்கு) பூனை கண்ணை மூடினால் என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே பின்னணி பாடியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அஜித்சிங் என்பவர், "தவப்புதல்வன்' என்ற படத்தில் லவ் ஈஸ் ஃபைன் டார்லிங் என்ற ஒரே ஒரு ஆங்கிலப் பாடலை பின்னணி பாடியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, இசையமைப்பாளர் கண்டசாலா, "கள்வனின் காதலி' என்ற படத்தில் வெய்யிற்கேற்ற நிழலுண்டு என்ற பாடலையும், உல்லாசம் போகும் எல்லோரும் ஓர்நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் என்ற பாடலை தெனாலிராமன் படத்திலும் பாடியிருந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக தெலுங்கு பின்னணிப் பாடகர் எம்.சத்தியம் என்பவர், "மங்கையர் திலகம்' என்ற படத்தில் "நீ வரவில்லை எனில் ஆதரவேது' என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.

நடிகர் திலகம் நடித்த படங்களில், பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம், "கப்பலோட்டிய தமிழன்.'

பூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த "வளர்பிறை' படத்தில் வரும்) "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை" என்ற பாடலாகும்.

பன்னிரண்டு தமிழ் மாதங்களின் பெயர்களும் இடம்பெற்ற இரு திரைப் பாடல்களில் ஒன்று, நடிகர் திலகம் நடித்த "ராஜராஜ சோழன்' படத்தில் இடம்பெற்ற, "மாதென்னைப் படைத்தான்' என்ற பாடலாகும்.

சிவாஜி நடித்த படங்களில் பாடல்கள் இருந்தும், சிவாஜி பாடாமல் இருக்கும் படங்கள் "மோட்டர் சுந்தரம் பிள்ளை', "தில்லானா மோகனாம்பாள்' ஆகிய படங்களாகும்.

பாடல்களே இல்லாத முதல் தமிழ்த் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த 'அந்தநாள்' படமாகும்.

இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம், நடிகர் திலகம் நடித்த "பைலட் பிரேம்நாத்' என்பதாகும்.

அதே போல இலங்கை நடிகை கீதா மோகனப் புன்னகை படத்தில் மட்டும் நடிகர் திலகத்தின் ஒரு ஜோடியாக நடித்திருக்கிறார். இதே படத்தில் நடிகர் திலகத்தை விரும்புபவராக நடிகை அனுராதா நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குநர் எம்.ஏ.திருமுகம், நடிகர் திலகம் நடித்த "தர்ம ராஜா' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார். இப்படத்தில் அனிதாபென் என்ற ஜப்பான் நாட்டு நடிகை நடிகர் திலகத்தின் இணையாக சில காட்சிகளில் வருவார்.

மனோரமா, நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த ஒரே படம், "ஞானப் பறவை' மட்டுமே.

நடிகர் ரவிச்சந்திரன் மோட்டார் சுந்தரம் பிள்ளை, கவரிமான் படங்களில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முதல் அகன்ற திரைப் (சினிமா ஸ்கோப்) படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப் படமாகும். ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி தயாரித்த படம் இது.

தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம், நடிகர் திலகம் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' (1956) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட "ஆன்' (கௌரவம்) என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ணப் படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும்.

பராசக்தி' படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு முதல், பூப்பறிக்க வருகிறோம் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் வரை, சுமார் 100 இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்துள்ளார்.

படத் தயாரிப்பைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தை வைத்து அதிக (17 படங்கள்) படங்களை தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி மட்டுமே.

பண்டரிபாய் முதல் சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள்.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள், "பலே பாண்டியா' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "சாந்தி' படத்தில் தாயாகவும் நடித்துள்ளார்.

ஜெயலலிதா, "மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், பல படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "பாட்டும் பரதமும்' படத்தில் நடிகர் திலகத்துக்கு தாயாகவும் நடித்துள்ளார்.

நடிகை லட்சுமியின் தாயார் குமாரி ருக்மணி, "கப்பலோட்டிய தமிழன்' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "ரோஜாவின் ராஜா' படத்தில் தாயாகவும், "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மாமியாராகவும் நடித்துள்ளார்.

நடிகை லட்சுமி, எதிரொலி, தங்கைக்காக, அருணோதயம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், ராஜராஜ சோழன் படத்தில் மகளாகவும், உனக்காக நான், தியாகம், நெஞ்சங்கள், ராஜரிஷி, ஆனந்தக் கண்ணீர், குடும்பம் ஒரு கோவில் ஆகிய படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி, நடிகர் திலகத்தின் மகளாக பைலட் பிரேம்நாத், கவரிமான் படத்திலும், ஜோடியாக விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை சுமித்ரா, அண்ணன் ஒரு கோயில் படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், வீர பாண்டியன் படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

விஜயகுமாரி, பார் மகளே பார் படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், குங்குமம், ராஜராஜ சோழன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், பச்சை விளக்கு படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், அன்பைத் தேடி, சித்ரா பௌர்ணமி படத்தில் நடிகர் திலகத்துக்கு சகோதரியாகவும் நடித்துள்ளார்.

தம்மை விட வயதில் மூத்தவரான பி.பானுமதியுடன் சில படங்களில் சிவாஜி இணைந்து நடித்துள்ளார்.

குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ஆகிய இரு படங்களில் சிவாஜி பெண் வேடங்களில் நடித்துள்ளார்.

பாபு, சம்பூர்ண ராமாயணம், லட்சுமி கல்யாணம், காவல் தெய்வம், படிக்காத பண்ணையார், மூன்று தெய்வங்கள் இன்னும் சில படங்களில் சிவாஜி நடித்த பாத்திரங்களுக்கு, கதாநாயகிகள் கிடையாது.

மராட்டிய மாமன்னர் வீர சிவாஜியாக நடிகர் திலகம் முழுப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் "ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிவாஜியாக சிவாஜி நடித்திருக்கிறார். பக்த துக்காராம் படத்தில் வீர சிவாஜியாக அமர்க்களமாக நடித்திருப்பார் நடிகர் திலகம்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.

திரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.

இலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும்.

சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.

  • 1013
  • More
சினிமா செய்திகள்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு