
கார்த்திக் இந்திரஜா இடையே 15 வயசு வித்தியாசம் என பகீர் கிளப்பிய செய்யாறு பாலு.
மறைந்த நடிகர் விவேக்கின் மகள் திருமணம் எளிமையாக நடந்த நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் திருமணத்தை இப்படி நடத்தியிருக்கிறாரே என பேச்சுகள் எழுந்த நிலையில் பல விஷயங்களை செய்யாறு பாலு தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
சர்க்கரை வியாதியால் அவதிப்பட்ட ரோபோ சங்கர் உடம்பு முடியாமல் கஷ்டப்பட்ட நிலையில், சினிமா வாய்ப்புகளே கிடைக்காமல் போய் விட்டன. அதிலிருந்து மீண்ட அவர் தனது மகளுக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று நினைத்தார். அதற்காக பல கோடிகளை கொட்டி மகள் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மாமா கார்த்திக்கையே திருமணம் செய்துக் கொண்டார். ஆரம்பத்தில் தாய் மாமா என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் சொந்த தம்பி இல்லை. ஆதரவற்ற என்னை அவர் தான் தத்தெடுத்து வளர்த்தார் என கார்த்திக் பேசியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கார்த்திக்கும் இந்திரஜா சங்கருக்கும் 15 வயசு வித்தியாசம் என பகீர் கிளப்பி உள்ளார் செய்யாறு பாலு. ஆனால், அதெல்லாம் பெரிய விஷயமில்லை என்றும் கார்த்திக் சுமார் 27 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் நல்ல குணமுடையவர் என்றும் அவரை பற்றி அறிந்ததும் ராதிகா சரத்குமார் ராஜ விருந்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
ரோபோ சங்கர் அவரது மகளுக்கு அதிகளவில் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்தார் என சொல்வது எல்லாம் அவருடைய குடும்ப விஷயம். ரோபோ சங்கரை விட அவரது மாப்பிள்ளை கார்த்திக் அன்பு இல்லம் எனும் ஆதரவற்றோர் இல்லத்தையே நடத்தி வருகிறார்.
15 லட்சத்துக்கு கார், பல சவரன் நகை போட்டுள்ளார் என்றால் எல்லாமே அவரது ஒரே மகளுக்காக சேர்த்து வைத்தது தான் என செய்யாறு பாலு பேசியுள்ளார். இந்திரஜா எல்லாத்தையும் வீடியோவாக வெளியிட்டு ஆட்டம் போட்டு அலப்பறை பண்றாங்க என பொறாமை படக்கூடாது என பேசியுள்ளார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva