
தனது அழகின் ரகசியத்தை கூறினார் நடிகை ஸ்ரித்திகா
பிரபல இளம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தன்னுடைய அழகின் ரகசியம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அதில் அவர் கூடிய விஷயங்கள் பெண்களுக்கு சிறந்த அழகு குறிப்பாக அமைந்துள்ளது. அவர் கூறியதாவது, எப்போதும் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றால் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். எந்த சோகமாக இருந்தாலும், எந்த கஷ்டமாக இருந்தாலும் சோகமான இருப்பது உடலுக்கும் கேடு மனதிற்கும் கேடு மற்றும் இல்லாமல் முக அளவிற்கு இருக்கும் கேடு விளைவிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது முகம் பளபளப்பாக இருப்பதற்கு காரணம் என்று கூறிய அவர், குளிக்கும் பொழுது அதிகமாக சோப் பயன்படுத்துவதை நான் விரும்பமாட்டேன். அந்த தப்பை எப்போதும் செய்வது கிடையாது.
என்னுடைய பாத்ரூமில் எப்போதும் கடலை மாவு, பாசிப்பயிறு மாவு, பாதாம் மாவு போன்றவை இருக்கும். அதை கொண்டு தான் நான் குளிப்பேன். முகம் கழுவது என்றால் கூட அவைகளை தான் பயன்படுத்துவேன்.
சோப்பு பயன்படுத்தியதே கிடையாது. அப்படியே பயன்படுத்தினாலும் இவை இல்லாத நேரங்களில் தான் சோப் பயன்படுத்துவேன். எனவே பெண்கள் தங்கள் சரும அழகை பேண வேண்டும் என்றால் வேதிப்பொருட்கள் நிறைந்த சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
முடிந்தால் இயற்கையான சோப்புகள் மற்றும் அல்லது பச்சை பயிறு மாவு, பாதாம் மாவு, கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தி குளிப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என கூறியிருக்கிறார்.















































