
கேரளா அரசின் திட்டங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் மஞ்சு வாரியார்
நடிகை மஞ்சு வாரியர் 1995 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். 1999 வரைக்கும் சினிமாவில் ஆக்டிவாக இருந்த இவர், 1999இல் தன்னுடன் நடித்த மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்ததுடன் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். ஆனால் சினிமா அவரை ஒதுக்கவில்லை என்பது 2014ல் தான் தெரிந்தது.
மஞ்சு வாரியர் ஒரு சிறந்த நடிகை என்பதை தாண்டி, பெண்கள் எப்படி தைரியமாக தன் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதற்கும் சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார். இன்றைய கதாநாயகிகளுக்கு போட்டியாக இளமை மற்றும் அழகுடன் இருக்கும் இவர் இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தன்னுடைய காதல் கணவரான திலீப்பை விவாகரத்து செய்த பிறகு, மீண்டும் சினிமாவை நோக்கி வந்த மஞ்சு வாரியர் இன்றுவரை வெற்றி படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டு தான் இருக்கிறார். மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் இவரை கொண்டாடும் அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையாலும், ஆளுமையாலும் இன்று வரை சிறந்து விளங்கி வருகிறார்.
தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர், அந்த படத்தில் அப்படியே தென் தமிழகத்தைச் சேர்ந்த சாமானிய வீட்டு பெண்ணாக வாழ்ந்திருப்பார். அசுரன் படத்திற்கு பிறகு இவர் நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தில் நடிப்பதற்காக இவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
15 வருடமாக சினிமாவில் சிறந்த நடிகை ஆக சாதித்து வரும் மஞ்சு வாரியரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 142 கோடியாகும். இளம் கதாநாயகிகளுக்கு இணையாக அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் தற்போது, மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் நடிகர்கள் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கிறார்கள்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva