
விவசாயம் செய்து அசத்தி வரும் நடிகர் கிஷோர்
பொதுவாக நடிகர்கள் என்றாலே சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பங்களா, ஹைஃபை பிசினஸ் என மாஸாக இருப்பார்கள். ஆனால் நடிகர் கிஷோர் முற்றிலும் இதற்கு மாறாக வெஸ்டர்ன் காட்ஸில் 12 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அதில் குடும்பத்துடன் ஆர்கானிக் விவசாயம் செய்து வருகிறார்.
பொல்லாதவன் படம் மூலம் தமிழில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் கிஷோர். கடந்த ஆண்டு இவர் நடித்த காந்தாரா படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தின் நாயகனுக்கு இணையாக இவரது ரோலும் பேசப்பட்டது.
தனது கல்லூரி கால காதலியான விசாலாட்சியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆர்கானிக் விவசாயம் செய்யும் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விசாலாட்சி பெங்களூருவில் தனது விவசாய நிலத்தில் விளையும் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். குடும்பத்துடன் விவசாயத்தையும் இவர்கள் ஆதரித்து பலருக்கும் அதன் நன்மைகள் குறித்து சொல்லி வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ரவிதாசனாக நடித்துள்ள இவர், பொன்னியின் செல்வன் 2-விலும் இடம்பெறுகிறார். பிஸியான நடிப்புக்கு நடுவே அடுத்த தலைமுறைக்கும் விவசாயம் சொல்லித் தரும் கிஷோருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva