
விஜய் சேதுபதியை வைத்து ரணகளம் செய்ய காத்திருக்கிறார் மிஷ்கின்
மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது மிஷ்கினின் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, விரைவில் ரிலீஸ் தேதியும் வெளியாக உள்ளது.
இதில் விஜய் சேதுபதி முக்கிய கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அப்போது மிஷ்கினும் விஜய் சேதுபதியும் மிக நெருங்கிய நண்பர்களாக மாறினர். அது இன்று வரை தொடர்ந்து வருகிறது. சில வருடங்களாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் பண்ணுவேன். அதற்காக கதை தயார், விஜய் சேதுபதி ஃப்ரீ ஆனதும் ஆரம்பித்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டே வந்தார். தற்போது விஜய் சேதுபதியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இவர் தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை முடித்தவுடன் மிஷ்கினின் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். மிஸ்கினும் பிசாசு 2 படத்தை வெளியிட்ட பின், தற்போது விஜய் சேதுபதியும் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை எல்லாம் முடித்துவிட்டால், அந்த படத்தை துவங்கி விடுவார்களாம்.
இந்த படம் திரில்லிங் கலந்த ஆக்சன் கதையாக இருக்கும். அதாவது மிஷ்கின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான அஞ்சாதே பட சாயலில் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மிஷ்கின்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாக்க உள்ள இந்த திரில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பிசாசு 2 படத்தை விட மிஞ்சி இருக்கிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva