
பலரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மனக்கவலை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் பார்த்து ரசிப்பதற்காகவே பலர் இதை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அந்த வகையில் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த சிவாங்கி தற்போது செய்திருக்கும் செயல் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக சிவாங்கி அறிமுகமானார். இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பென்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவருடைய பாடல் திறமை வெளிச்சத்துக்கு வராத நிலையில் சிவாங்கிக்கு வேற லெவலில் பாப்புலர் கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் தொடங்கி மூன்று சீசன்களாக சிவாங்கி கோமாளியாக கலந்து கொண்டு இருந்தார். அதுவும் அஸ்வினுடன் இவர் செய்யும் க்யூட்டான லூட்டிகள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. சிவாங்கி அஸ்வினே என்று அழைத்தே அஸ்வினுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தை பெருக்கி விட்டார். அது மட்டுமல்லாமல் புகழோடு சேர்ந்து இவர் அடிக்கும் அண்ணன் தங்கச்சி லூட்டிகளும் வேற லெவலில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதிகமான மீம்ஸ்களில் புகழ் மற்றும் சிவாங்கியின் க்யூட்டான புகைப்படங்கள் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவ்வப்போது சிவாங்கி எடுத்துவிடும் பாட்டுக்கள் வேற லெவலில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
ஒரு சில திரைப்படங்களின் பாடல்களுக்கும் சிவாங்கி பாடி கொண்டிருக்கிறார். பல ஆல்பம் சாங்களிலும் சிவாங்கி பாடி சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய குக் வித் கோமாளி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கோமாளியாக இல்லாமல் குக்காக அதுவும் கிளாசுக்கு சென்று சமையலை நன்றாக கற்றுக் கொண்டு இந்த சீசனில் களம் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் நான் குக்காக மாறினாலும் எனக்குள் ஒரு கோமாளி ஒழிந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் சிவாங்கி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் சிவாங்கி ஷூட்டிங்க்கு வந்த வெங்கடேஷ் பட்டின் காரை வழிமறித்து செய்யும் சேட்டைகள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. காரில் இருந்தபடியே சிவாங்கி வெங்கடேஷ் பட்டை கலாய்த்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva