
பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் காலமானார்
பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரின் நெற்றியில் ரத்தக் காயங்கள் இருந்ததால், தடுமாறி கீழே விழுந்து இறந்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாணி ஜெயராம் வீட்டில் பணியாளராக பணியாற்றிய மலர்க்கொடி இது குறித்து பேசும்போது “நான் தினமும் வருவது போல காலை 10.45 மணிக்கு வந்தேன். காலிங் பெல்லை அழுத்திய போது அவர் கதவை திறக்கவில்லை. பின்னர் பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் சொல்லி உள்ளே சென்ற போது அவர் பெட்ரூமில் கீழே விழுந்து கிடந்தார். அவர் உடல்நிலை நன்றாகதான் இருந்தது. எந்த உடல்நலப் பிரச்சனையும் இல்லை. அவர் எனக்கு தாயை போல” எனக் கூறியுள்ளார்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























