
மீண்டும் வரலாற்று படத்தில் நடிக்கப் போகும் விக்ரம்
விக்ரம் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராய் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் பாராட்டை பெற்று வருகிறது. நீண்ட வருடமாக எடுக்க இருந்த பொன்னின் செல்வன் திரைப்படத்தை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக மணிரத்தினம் இயக்கிய உள்ளதாக கூறி வருகின்றனர். விக்ரம் நடித்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் தற்போது விக்ரம் மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது விக்ரம் இந்தியில் அலாவுகிக் தேசாய் இயக்குனருடன் இணைந்து ராமாயண கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க இருப்பதாக கூறி வருகின்றனர். இப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணவத் நடிப்பதாகவும் கூறி வருகின்றனர்.
பாகுபலிக்கு கதை வசனம் எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கும் கதை வசனம் எழுதி இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் இப்படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக தற்போது பல நட்சத்திரங்களையும் நடிக்க வைக்க இருப்பதாக கூறி வருகின்றனர்.
விக்ரம் இப்படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால் விக்ரம் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறிவருகின்றனர். மேலும் கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.















































