
'பொன்னியின் செல்வன்’ முதல் நாள் வசூல்.. அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் முதல்நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருக்கலாம் என டிரேடிங் வட்டாரங்கள் கூறிய நிலையில் சற்று முன் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வசூல் நிலவரங்களை தெரிவித்துள்ளது.
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் ஒரே நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளது.
100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை ஒரே நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்த படம் எதுவும் இல்லை என்பதால் இந்த படம் வரலாற்று சாதனை செய்து உள்ளதாக கருதப்படுகிறது.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























