
சரத்குமார் கையில் இவ்வளவு படங்களா.?
சரத்குமார் 70களின் இறுதியில் வில்லனாக அறிமுகமானார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ, ஆக்சன் ஹீரோ என தன்னுடைய நிலையை உயர்த்தி கொண்டார். இப்போது நிறைய நல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சரத்குமாரின் கைவசம் இப்போது மொத்தம் 27 படங்கள் இருக்கின்றன.
பொன்னியின் செல்வன் :
இந்திய திரையுலகின் டாப் லிஸ்ட் படமான பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் சரத்குமாருக்கு மனைவியாக வருகிறார். சோழர்களுக்கு இணக்கமான பழுவேட்டையர்களில், சரத்குமார் பெரிய பழுவேட்டையராக வருகிறார்.
வாரிசு:
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தில் ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா பலரும் நடிக்கின்றனர். வாரிசு படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.
ருத்ரன்: ‘
5 ஸ்டார்’ கதிரேசன் தயாரித்து இயக்கம் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். திகில், த்ரில்லர் நிறைந்த இந்த படத்தில் சரத்குமாரும் நடிக்கிறார்.
பரம்பொருள்:
அரவிந்த் ராஜ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் பரம்பொருள் திரைப்படத்தில் நடிகர் அமிதாஷ் பிரதானுடன் இணைந்து சரத்குமார் நடிக்கிறார். இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
நான்கு வழி சாலை:
மலையாள படமான டிராபிக் படத்தின் தமிழ் ரீமேக் தான் நான்கு வழி சாலை. இந்த படத்தில் சரத்குமாருடன் இணைந்து சேரன், ரோகினி, நாசர், பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், பிரசன்னா ஆகியோர் நடிக்கின்றனர்.















































