
தன்னை விட 9 வயது இளையவரை காதலிக்கும் அமீஷா படேல்
47 வயதாகும் பாலிவுட் நடிகை அமீஷா படேல் பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸை காதலிக்கிறார். இம்ரான் அப்பாஸ்க்கு 38 வயது ஆகிறது. இருவருக்கும் 9 வயது வித்தியாசம் தமிழில் நடிகர் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்தவர் நடிகை அமீஷா படேல். இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து உள்ளார். அமீஷா படேல் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
நீச்சல் உடையில் தனது அட்டகாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸுடன் இருக்கும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். தலைப்பில், 'கடந்த வாரம் பஹ்ரைனில் எனது சூப்பர் ஸ்டார் நண்பரான இம்ரான் அப்பாஸுடன் இருந்தேன் என குறிப்பிட்டு உள்ளார். வீடியோவில், அமீஷா மற்றும் பாபி தியோல் நடித்த கிராந்தியின் தில் மே தார்த் சா ஜகா ஹை பாடலில் அமீஷாவும் இம்ரானும் ஒருவரையொருவர் ரொமான்ஸ் செய்து கொண்டனர்.















































