-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 20.4.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சிறுதூர நடை பயிற்சிகளின் மூலம் மன அமைதி ஏற்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உணவு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பயணம் மேற்கொள்வதற்கான சூழல் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிதுனம்
செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பத்திர துறைகளில் சிந்தித்து செயல்படவும். தந்தைவழி உறவுகளிடம் இணங்கிச் செல்லவும். செயல்படும் விதத்தில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கடகம்
தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் நலனில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அமையும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
சகோதரரின் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் உண்டாகும். சொத்து விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். நீண்ட தூரப் பயணங்கள் ஈடேறும். கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆசைகள் நிறைவேறுவதில் இருந்துவந்த தடைகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
பொழுதுபோக்கான செயல்களின் மூலம் விரயம் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பிறமொழி மக்களிடம் கனிவுடன் செயல்படவும். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சோர்வு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வரவுகளில் மந்தமான சூழல் இருக்கும். சுப காரியங்களில் தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். சுப காரியம் தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்படவும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
தடைப்பட்ட சில காரியங்கள் முடியும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். புதிய கனவுகள் பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மகரம்
மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். துணைவரின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் அமையும். வெளிவட்டாரத்தில் நட்புகளால் புதிய அனுபவம் ஏற்படும். வர்த்தகத்தில் சிந்தித்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வாகன வகையில் ஆதாயம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் சாதகமாகும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
கணவன், மனைவிக்குள் புரிதல் மேம்படும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·