Feed Item
Added article 

சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை கூறினாலும் இவரின் காமெடி ரசித்துக் கூறினாலும் கமெண்ட் பாக்ஸில் வந்து திட்டி வைப்பவர்கள் ஏராளம்.

உண்மையில் வடிவேல் ஒரு நல்ல கலைஞர் நல்ல நகைச்சுவை திறன் உள்ளவர். ஆரம்ப காலத்தில் அவரின் கிழக்கு சீமையிலே, செல்லக்கண்ணு சக்தி, தேவர் மகன், சிங்காரவேலன் இதுபோல படங்களில் அவரின் பாடி லேங்குவேஜ் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும்.

அப்படிப்பட்ட கலைஞர் ஆன வடிவேல் அரசியல் ரீதியான காரணங்களாலேயே பலரால் புறக்கணிக்கப்படுகிறார் இதை அவர் புரிந்து கொள்ளவே இல்லை.

இதைப் போல அடிப்படையை புரிந்து கொள்ளாமல் எனக்கு கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கன்னிவெடி வைக்கிறார்கள் என புலம்புவதே வடிவேல் வேலையாக இருக்கிறது.

வடிவேல் போன்ற மிகப்பெரிய கலைஞனாக இருந்தாலும் சரி, பழைய ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம் விற்கும் தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி நல்ல புகழையும் லாபத்தையும் சம்பாதிக்கும் நேரத்தில் அரசியல் ரீதியாக உள்ளே புகுந்தால், அது அவரை கண்டிப்பாக வீழ்த்தி விடும்.

ஏனென்றால் ஒருவர் ஆதரிக்கும் கட்சிக்கு எதிராக எண்ணற்றவர்கள் இருப்பார்கள். அந்த குறிப்பிட்ட நபருக்கு ஆதரவு கொடுத்தவர்கள், ஓ இவர் இந்த கட்சியா என அவர் மீது வெறுப்பை கக்க ஆரம்பிப்பார்கள், இது போன்ற விஷயங்களை நடிகர் வடிவேல் கடைசிவரை புரிந்து கொண்டதாய் தெரியவே இல்லை. இன்னும் அவர் தன் மேல் தவறு இல்லை என்பது போலவே பேசிக் கொண்டிருக்கிறார்.

முக்கியமாக கேப்டன் விஜயகாந்த், குறித்து பேசியதெல்லாம் மிக மிக தவறான ஒரு விஷயம், அவர் இறந்த பிறகு கூட நான் பேசியது தவறுதான் என ஒப்புக்காக கூட சிறிய வருத்தம் தெரிவிக்காமல், இரங்கல் தெரிவிக்காமல்தன் மீது தவறு இல்லாதது மாதிரி எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பது தான் வருத்தமான விஷயம். இதனால்தான் வடிவேல் பெயரைச் சொன்னாலே அவரைப் பற்றி கட்டுரை எழுதினாலே நெகட்டிவ் கருத்துகள் அதிகம் வருகிறது. இனி வடிவேல் எவ்வளவு பெரிய நல்ல காமெடிகள் நடித்தாலும் காமெடிகள் உண்மையில் நன்றாகவே இருந்தாலும் பழைய அளவுக்கு, அதெல்லாம் எடுபடுமா என தெரியவில்லை.

  • 127